சர்வதேச சதுப்பு நிலம் பாதுகாப்பு தினம்..!
திருவாரூர் வனக்கோட்டம் முத்துப்பேட்டை வனச்சரகத்தில் ஜூலை 26 சர்வதேச சதுப்பு நிலம் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ஜாம்பவான்ஓடை புதிய படகு துறையில் கண்டல் மரக்கன்றுகள் ஓ எம் ஏ மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளுக்கு காடுகள் மற்றும் வனவிலங்குகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது மதியம் ஓ.எம்.ஏ பள்ளியில் அலையாத்தி காடுகளின் முக்கியத்துவம் குறித்து மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்யப்பட்டது.
இதில் மாவட்ட வன அலுவலர் எல்.சி.எஸ் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார் இந்நிகழ்வில் ஓ.எம்.ஏ பள்ளி தாளாளர் ஓ.எம்.எ பள்ளி நிறுவனர் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜவேலன் வீரன் கோயில் வனக்குழு தலைவர் சங்கர் ஓம்கார் பவுண்டேஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ஒலிவியா ஆகியோர் கலந்துகொண்டு அலையாத்தி காடுகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் முத்துப்பேட்டை வன சரக அலுவலர் ஜனனி நன்றி தெரிவித்தார் மேலும் வனவர் சீனிவாசன் நிகழ்ச்சி நிரல்களை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் வனக்காப்பாளர் மற்றும் வன காவலர்கள் கலந்து கொண்டனர்.



Comments
Post a Comment