ஆதித்தமிழர் பேரவையினர் நீட் தேர்வு, சாதி வாரி கணக்கெடுப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய ஒன்றியம் முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும், கோவிலாங்குளம் அழகேந்திரன் ஆவண படுகொலை கண்டித்தும் ஆதித்தமிழர் பேரவையான தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கு மற்றும்
அவர் குடும்பத்தார் மீதும் போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், தாக்கப்பட்டவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் எஸ்சி. எஸ்டி வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் மாநிலத் துணை பொதுச் செயலாளர் விடுதலை செல்வன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி, கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் சரவண குமார் மற்றும் மாநில, மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment