பல்வேறு கட்டணங்களை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து அமமுகவினர் ஆர்ப்பாட்டம்..!
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டால் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி பல மடங்கு உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்வு, முத்திரைத்தாள், மறைமுக பேருந்து கட்டணம், சாலை வரி உயர்வு என பல்வேறு கட்டணங்களை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழகச் செயலாளர் டி.கே ராஜேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் முருகன், பாலு, ஏகநாதன், மணிமேகலன், கௌதமி, சங்கீதா மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment