புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா..!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வடக்கு வீதியில் அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி இயங்கி வந்தது. பின்னர் 1980 ஆண்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியாக இயங்கிவருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாமல் ஆஸ்பட்டாஸ்சீட்டு அமைக்கப்பட்டு அதில் இயங்கிவந்தது. இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சத்தில் இரண்டு வகுப்பரை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா கடந்த மே 9ம் தேதி நடைபெற்றது. 

புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் எம்எல்ஏ மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், வட்டார கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், அறிவழகன், நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, ஒன்றிய ஆணையர் கமல ராஜன், பொறியாளர் சூரியமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் எழிலரசன், தலைமையாசிரியர் வேதரெத்தினம் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!