ரூபாய் 21 ஆயிரம் மதிப்பில் வர்ணம் பூசி தந்த முன்னாள் மாணவர்கள்..!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அருகே உள்ள எடையூர் அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் 280க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் அமரும் இருக்கைகள் மிகவும் பழுதடைந்து
துருப்பிடித்து இருந்தது இதை பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் இணைய வழியாக தெரிவித்தனர். இதனை அறிந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மூன்று பேர் பி டி ஏ பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு வர்ணம் பூசி தருவதாக ஒப்புக்கொண்டனர். சிங்கப்பூரில் பணியாற்றி வரும் எடையூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் அய்யப்பன்,இராமமூர்த்தி மகன் ராஜ்மோகன்,பன்னீர்செல்வம் மகன் முருகானந்தம் ஆகியோர் இணைந்து முன்னாள் எம்எல்ஏ, எம்பி ஆகியோரால் வழங்கப்பட்ட இருக்கை மற்றும் மேஜைகளுக்கு (60செட்) ரூபாய் 21 ஆயிரம் மதிப்பில் வர்ணம் பூசப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கைகளை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாக்யராஜ் ஆசிரியர் இந்திரா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பள்ளிக்கு உதவிய மூன்று முன்னாள் மாணவர்களையும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் , பொதுமக்கள், பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Comments
Post a Comment