78வது சுதந்திர தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை...!
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ 78வது சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றிவைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் கண்கவரும் வகையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இந்நிகழ்வில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் , கூடுதல் ஆட்சியர் பிரியங்கா , மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து சமாதான புறாவினை மாவட்டஆட்சியர், மாவட்டகாவல் கண்காணிப்பாளர் பறக்கவிட்டனர். நிகழ்ச்சியில் அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய 233 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
Comments
Post a Comment