பா ம க நியமன மனு பெறுதல் ஆலோசனைக் கூட்டம்..!
தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி சட்டமன்ற தொகுதியின் புதியதாக தொகுதி தலைவர், செயலாளர், மகளிரணி தலைவர், செயலாளர் பொறுப்புகளுக்கு நியமன மனு பெறுதல் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி ஒட்டப்பட்டியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் கூட்டத்தில் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவை மாநில தலைவர் வழக்கறிஞர் பாலு, சிறுபான்மைப் பிரிவு மாநில தலைவர் மொய்தீன், பசுமைத் தாயக மாநில துணை செயலாளர் பொன்மலை ஆகியோர் கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றி, புதிய பொறுப்பிற்கு விரும்பும் பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு பெற்றுக்கொண்டு, விருப்ப மனு அளித்தவர்களை தனித்தனியாக அழைத்து பேசினர். கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.பாரிமோகன், மாநில துணை தலைவர் பெ.சாந்தமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் த.காமராஜ், மு.மனோகரன்,
வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் வ.பிரகாஷ், மாவட்ட பொருளாளர் கு.சரவணகுமாரி, மாவட்ட அமைப்பு செயலாளர் அன்பழகன், மாவட்ட அமைப்பு தலைவர் கே.இ.கிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் க.நம்பிராஜன், டி.ஜி.மணி, தேவேந்திரன், பசுமைத் தாயக மாநில துணை செயலாளர் க.மாது, அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் ரா.கார்த்திகேயன், முன்னாள் சிறப்பு மாவட்ட செயலாளர் கோ.சின்னசாமி, மாவட்ட இளம்பெண்கள் சங்க செயலாளர் சாந்தினி, அன்புமணி தங்கைகள் படை தலைவர் சாந்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெயலட்சுமி, மாவட்ட மகளிர் சங்க செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட மகளிர் சங்க பொறுப்பாளர் கவிதாசெல்வராஜ், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் சின்னசாமி, மாவட்ட தொழிற் சங்க தலைவர் தகடூர் ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.எம்.சேகர் மற்றும் நிர்வாகிகள் – தகடூர் தமிழன், மாது, முத்துவேல், ஜெயக்குமார், வெங்கடாசலம், ராமமூர்த்தி, வெங்கடேசன் உள்ளிட்ட மாநில, மாவட்ட பொறுப்பாளர்களும், அணிகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, அணி, துணை பொறுப்பாளர்களும், தொண்டர்களும் திரளாக கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி தெரிவித்தார்.


Comments
Post a Comment