தமிழக வெற்றிக் கழக கொடி மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஏற்றிய நிகழ்ச்சி..!

தருமபுரி அடுத்து சோகத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியேற்றும் விழா மாவட்ட கட்சி அலுவலகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. நடிகருமான  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 22 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள  தலைமை கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி அறிமுகப்படுத்தி  வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழக முழுவதும் மாவட்ட நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி கட்சி அலுவலகத்தில் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில்  தருமபுரி மாவட்டத்தில் சோகத்தூர் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்தில் தருமபுரி மாவட்ட தலைவர் தாபா

சிவா தலைமையில் கொடியை ஏற்றி வைத்து  பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்      தருமபுரி,       பாப்பாரப்பட்டி,      பாலக்கோடு, காரிமங்கலம்,    பென்னாகரம்,  நல்லம்பள்ளி,     பாப்பிரெட்டிப்பட்டி,     அரூர், மொரப்பூர்,     பொம்மிடி           என         பல்வேறு    இடங்களில்    இருந்து    திரளான கட்சி தொண்டர்கள்   மற்றும்   மாவட்ட,       நகர,      ஒன்றிய,    நிர்வாகிகள்,    கட்சியின் உறுப்பினர்கள்   என       ஏராளமானோர்          கலந்து         கொண்டனர்.       பின்னர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  அனைவருக்கும்    உணவு     வழங்கப்பட்டது.




Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!