புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்..!
தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் கோட்டை கருப்பன் கிடா விருந்து கடையில் இன்று புதிதாக பிரியாணி கடை திறக்கப்பட்டது. இந்த கடை திறப்பு விழாவையொட்டி, இன்று ஒருநாள் மட்டும் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என விற்பனை செய்யப்பட்டது.
இதனை அறிந்த அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பிரியாணி வாங்குவதற்காக காலை முதலே குவிந்தனர். தொடர்ந்து கடை திறக்கப்பட்டு 12 மணி அளவில் பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது. இதில் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பதால் ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். இதனால் புதிய பிரியாணி கடையில் மக்கள் கூட்டம் அலைமோதினர் . மேலும் பிரியாணி கடை திறப்பு விழாவை ஒட்டி சலுகை விலையில் இரண்டு பிரியாணி கொடுக்கப்பட்டதால், அதிக அளவில் மக்கள் மூன்று பிரியாணி நான்கு பிரியாணி என பார்சல் வாங்கிச் சென்றனர். இதனால் பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் மக்கள் கூட்டம் பரபரப்பாகவே காணப்பட்டது.

Comments
Post a Comment