தருமபுரியில் எச்ஐவி எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்..!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தருமபுரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அழகு, ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி இணைந்து  எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் சாந்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கிராமிய கலைஞர்கள் நடன மூலமும், ஆட்டோக்களில் போஸ்டர் போட்டியும், அரசு வாகன மூலமும் விழிப்புணர் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இலக்கியம்பட்டி வரை எய்ட்ஸ் கட்டுப்பாடு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டும், கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். 

ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி கொண்டு விழிப்புணர்  பிரச்சாரம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், NHM ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சையது முகைதீன் இப்ராகிம், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சிவக்குமார், துணை இயக்குநர் (காசநோய்) பாலசுப்பிரமணியம், ராமலி ராமகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் செல்வி, மாவட்ட திட்ட மேலாளர் அருள், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் உலகநாதன், ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, துறை சார்ந்த அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள், நலமையங்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!