ரூ.27.14 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்..!

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பங்குநத்தம் ஊராட்சி, சின்னபங்குநத்தம் மற்றும் இராஜாகொல்லஅள்ளி கிராமங்களில் தலா ரூபாய் 13.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் அமைக்கப்பட்டது. 

இந்த அங்கன்வாடி மைய கட்டிடங்களை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ரிப்பன் வெட்டி திறந்து, பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் சுகந்திபிரியா, பாமக மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் மணி, ஊராட்சி மன்ற தலைவர் இராஜசேகர், ஒன்றிய தலைவர் விஜியகுமார், ஊராட்சி செயலாளர் ஜம்பேரி, ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருமாள், மாதப்பன், முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.



Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!