7 ஊர் பொதுமக்கள் கொண்டாடும் திரௌபதி அம்மன் திருவிழா..!

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கூத்தப்பாடி குளத்தங்கரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம்  3-வது சனிக்கிழமை வருடா வருடம் நடைபெறும் திருவிழா வருகின்ற  04-10-2024முதல்12-10-2024 வரை நடைபெற உள்ளது. 

நிகழ்ச்சி நிரல் வெள்ளிக்கிழமை 04-10-2024 மாலை 4 மணி கோவிலில் இருந்து சாமி சிலைகள் கூத்தப்பாடி  மண்டு  எடுத்து செல்லுதல்,சனிக்கிழமை 05-10-2024 கூத்தப்பாடி கிராமத்தில்  காலை 10 மணி அளவில் சாமி சிலைகள்ஊர்வலம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை குள்ளாத்திரம்பட்டி கிராமத்தில் 06-10-2024 காலை 8 மணியளவில் தீமிதி திருவிழா மற்றும் ஊர்வலம்  நடைபெறும். திங்கட்கிழமை 07-10-2024 பொச்சாரம்பட்டி  மற்றும் அளேபுரம் கிராமத்தில் ஊர்வலம் நடைபெறும். செவ்வாய்க்கிழமை 08-10-2024 அக்ரகாரம் கிராமத்தில் ஊர்வலம் நடைபெறும். புதன்கிழமை 09-10-2024 தன் தாய் கிராமமான மடம் கிராமத்தில் ஓய்வு வியாழக்கிழமை 10-10-2024 காலை 8 மணி அளவில் தீமிதி திருவிழா மற்றம் ஊர்வலம் நடைபெறும், மாலை 3 மணி அளவில் கீழூர் கிராமத்திற்கு சாமி சிலைகள் எடுத்து வருதல் மற்றும் ஊர்வலம் நடைபெறும் மாலை 5 மணி அளவில் தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலுக்கு எடுத்துச் வெள்ளிக்கிழமை 11-10-2024 காலை 8 மணி அளவில் சின்னப்பநலூர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லுதல் சின்னப்பநல்லூர்கிராமத்தில் சனிக்கிழமை 12-10-2024 காலை 5 மணி அளவில் 108 கங்கா பூஜை செய்தல் பூஜை முடிந்தவுடன் தீமிதி அக்னி குண்டம்  இறங்குதல்  தொடர்ந்து ஊர்வலம் நடைபெறும் மாலை 4 மணி அளவில் அம்மனுக்கு தாலாட்டுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது. அனைவரும் வந்து அம்மன் அருள் பெற பென்னாகரம் தேஜஸ் அகாடமியின் சார்பாக அன்புடன்  வரவேற்கின்றனர் .

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!