அரசு மதுபான கடை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ-விடம் மனு..!

 தருமபுரி நகராட்சி, இராஜகோபால்கவுண்டர் தெரு, மீன் மார்க்கெட் பகுதியில் புதியதாக ஒரே நாளில் அரசு மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. மதுபான கடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் நகர பேருந்து நிலையம், மீன்மார்க்கெட், மருத்துவமனைகள், காய்கறி மார்க்கெட், உணவகங்கள், மோட்டார் பழுதுபார்க்கும் கடைகள், ஆட்டோ நிறுத்தம், தனியார் விடுதிகள், பல்வகை வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 

மதுபான கடை அமைக்கப்பட்டுள்ள தெரு ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக அமைந்துள்ளது. இத்தெருவிற்கு அருகில் ஏற்கனவே அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தன. மது குடிப்பவர்கள் தொழில் செய்யும் கடை முன்பு மதுவை அருந்திவிட்டு கடை முன்பும், சாலையிலும் விழுந்துக்கிடக்கின்ற காட்சியெல்லாம் காணப்பட்டது. கடைகளின் முன்பு மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்பளர், வாந்தி எடுத்தல், மதுபாட்டிகள் உடைத்தல், பல்வேறு பிரச்சனைகள், பெண்களை கேலி செய்தல் போன்றவை நிகழ்ந்த காரணத்தால் அங்கிருந்த அரசு மதுபான கடை அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் மக்கள் கூடும் இடமான முதன்மை தெருவில் அரசு மதுபான கடை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள், நோயாளிகள், பயணிகள், விவசாய பெருமக்கள், பொதுமக்கள் இச்சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.மாலை வேளையில் மதுக்கடையின் அருகிலுள்ள தொழில் செய்கின்ற கடைகளின் முன்பு கூட்டமாக அமர்ந்து, மது குடிக்கின்ற நிலையை முதல் நாளிலேயே காணப்பட்டது. 

சிலர் பேருந்து நிலையத்திற்குள் தள்ளாடுகின்ற நிலையிலும், பயணிகள் அமருகின்ற இடங்களிலும் மது மயக்கத்தில் மயங்கி இருக்கின்ற சூழ்நிலை நிலவி வருகின்றன. மதுக்கடை அமைக்கப்பட்டுள்ள பகுதியின் அருகே உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களை சார்ந்த உரிமையாளர்கள் தங்களின் தொழில் பாதிக்கப்படுவதாக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரனை நேரில் சந்தித்து மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்தனர். உடனடியாக மதுக்கடையை அகற்ற முழு முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.   மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைத் தீர்க்கும் முகாமில் பல்வேறு வணிக தொழில் செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஒன்று திரண்டு மதுக்கடையை அகற்ற கோரி கோரிக்கை மனுவை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் முன்னிலையில் அளித்தனர்.  இந்நிகழ்வின் போது மாவட்ட பொறுப்பாளர் சின்னசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இராமமூர்த்தி, அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகர செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் கலீம், நகர இளைஞரணி செயலாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!