பொன் ஆண்டு விழாவை முன்னிட்டு நல திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா..!
சென்னை ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் நிறுவன தலைவர் மற்றும் ஒரே தேசம் (வார இதழ்) வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் பாலாஜி அவர்களின் பொன் ஆண்டு விழாவை முன்னிட்டு நல திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு முத்து பில்டர்ஸ் உரிமையாளர் மதுரை முத்துராஜ், ஆவடி RMKசூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கிருஷ்ணா மற்றும் போரூர் அய்யா குழு நிர்வாகி ஐயப்பன் அவர்கள் உதவியுடன் இவ்விழா நடைபெற்றது. சேவரத்னா உதவும் தேவதை செல்வாம்பிகை பாலாஜி தலைமையில் பொருளாளர் ராஜேஸ்வரி அவர்களின் ஏற்பாட்டில் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக
முர்த்தி தொழிலதிபர் பத்திரிக்கை சங்க தலைவர் குரு இளம் சமூக சேகர் ஷச்சின் மற்றும் சின்னத்திரை நடிகர் விக்கி ரோஷன் மற்றும் கோதண்டம் அவர்கள் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர் மற்றும் பொதுமக்களுக்கும் நல உதவி திட்டங்களும் பல்வேறு உதவிகள் செய்து வரும் சமூக சேவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர். இவ்விழா முடிவில் நிறுவனத் தலைவர் பாலாஜி அவர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.


Comments
Post a Comment