முன்னாள் மாணவர்களின் தொடர் உரை கருத்தரங்கம்..!

தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 'இயற்பியல் துறை சார்பில் கணினி - உதவி மருந்து வடிவமைப்பில் சமீபத்திய முன்னேற்றங்கள் இயற்பியலின் ஒருங்கிணைந்த பங்கு' என்ற தலைப்பில் முன்னாள் மாணவர்களின் தொடர் உரை கருத்தரங்கம் நடைப்பெற்றது. 

இயற்பியல் துறை தலைவர் மற்றும் கருத்தரங்கு அமைப்பாளர்  செல்வபாண்டியன் கருத்தரங்கின் முக்கியத்துவம் மற்றும் மருத்துவ துறையில் இயற்பியலின் பங்கு குறித்து எடுத்து கூறி வரவேற்புரை நிகழ்த்தினார். சுருத்தரங்கின் சிறப்பு விருந்தினரும் மற்றும் இத்துறையின் முன்னாள் மாணவருமான ஜெகநாதன், உதவி பேராசிரியர்,  சவிதா பல்கலைக்கழகம், சென்னை, அவர்கள்  கணினி உதவி கொண்டு மருத்து வடிவமைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து பேசினார். இதில் ஆராய்ச்சி மைய இயக்குநர் (பொ) பேரா.   மோகனசுந்தரம் அவர்கள் தலைமை வகித்தார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பிரசாத் அவர்கள் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கௌரவ விரிவுரையாளர்கள் கோபலகிருஷ்ணன், செந்தில் மற்றும் இயற்பியல் துறை மாணாக்கர்கள் செய்திருந்தனர். இக்கருத்தரங்கின் நிகழ்ச்சிகளை கோகுலபிரியா, வினோதினி ஆகியோர் தொகுத்து வழங்கினார்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!