தீயணைப்புத் துறையினர் விபத்தில்லா தீபாவளி கொண்டதற்கான விழிப்புணர்வு பேரணி..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விபத்துல்லா தீபாவளி கொண்டாடுவதற்காக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தருமபுரி தீயணைப்பு துறை அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணிக்கு தயாராக இருந்த வாகனங்களை தருமபுரி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அம்பிகா கோடியாசித்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகன பேரணியானது இலக்கியம்பட்டி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய வழியாக நான்கு ரோடு வரை விபத்தில தீபாவளி கொண்டாடுவதற்கான விழிப்புணர்வு துண்டு பிரச்சனைகள் வழங்கியும், புகை நமக்கு பகை, குழந்தைகளிடம் பட்டாசு பெட்டிகளை கொடுக்காதீர், பருத்தி ஆடை பயன்படுத்தவும், சாலையில் பட்டாசு வெடிக்காதீர்கள், குடிசை அருகில் பட்டாசு வெடிக்காதீர் இது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதவிகளை ஏந்திக்கொண்டு சாலையில் வாகன பேரணியாக சென்று மீண்டும் தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்.
இதுபோன்று மாவட்டத்திலுள்ள அனைத்து இடங்களிலும் விபத்துல்லா தீபாவளியை கொண்டாடுவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Comments
Post a Comment