அவசரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..!
அவசரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..!
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் வட்டுவன ஊராட்சி, அலகட்டு மலை கிராமத்தில் ருத்ரப்பா, சிவலிங்கி தம்பதியினருக்கு பிறந்த கஸ்தூரி எனும் 13 வயது சிறுமி வீட்டின் அருகே கீரை பறிக்கும் பொழுது சிறுமியை பாம்பு கடித்ததால் சிறுமி சத்தமிட்டுள்ளார் அப்பொழுது அங்கு உள்ள கிராம மக்கள் சிறுமியிடம் கேட்டபோது பாம்பு கடித்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர வழியில்லாத காரணத்தால் அப்பகுதி கிராம மக்கள் சிறுமியை தொட்டில் கட்டி சுமார் 8 கிலோமீட்டர் அளவில் மலைக்காடு வழியாக தார் சாலையில் உள்ள ஆட்டோவிற்கு நடைபயணமாக தூக்கி சென்றனர். பாலக்கோடு அருகே சீங்காடு என்ற பகுதியை அடைந்து அங்கு தயார் நிலையில் இருந்த ஆட்டோவில் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்றும் பொழுது அவர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இதனால் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மலை கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம், சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதி இல்லாததால் சிறுமியின் உயிரிழப்புக்கு இதுவே காரணம், மலை கிராம மக்கள் எங்களுக்கு சரியான சாலை வசதி இருந்திருந்தால் சரியான நேரத்திற்கு சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றி இருப்போம், இதுபோன்று வேறு ஒரு அசம்பாவிதம் உயிரிழப்பு ஏற்படாத முன் எங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சாலை வசதிகளை செய்து தர வேண்டும் என வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். இதனால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments
Post a Comment