விவசாயிகள் தண்ணீர் உரிமை கோரிக்கை மாநாடு..!

தருமபுரி மாவட்ட விவசாயிகள் தண்ணீர் உரிமை கோரிக்கை மாநாடு தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் சின்ன சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள்  சக்திவேல், குப்புசாமி, பொருளாளர் பழனி, மாவட்ட துணைத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் முனி ராஜ்,  இளைஞரணி தலை வர் வெங்கடேசன், துணைத் செயலாளர் சுப்பிர மணி, பட்டு பிரிவு செயலாளர் ராஜா, துணை செயலாளர்  நடராஜ்,  சட்ட ஆலோசகர் ராமசாமி, கரும்பு பிரிவு தலைவர் லோகநாதன்,  செயலாளர் குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுசெயலாளர் சுந்தரம்,  பொருளாளர் பாண்டியன், துணை தலைவர் ஆறுமுகம், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ஸ்ரீராம்ரெட்டி,  செயலாளர் சென்னைய நாயுடு, பொருளாளர் சண்முகம், மாநில செயலா ளர் சின்னசாமி, துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தருமபுரி மாவட்டம் தொடர் வறட்சி யால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பிழைப்பு தேடி அண்டை மாவட்டங்கள், அண்டை மாநிலங்களுக்கு செல்லும் அவலநிலை நீடிக்கின்றது. இந்த மாவட்டத்தை ஒட்டி ஓடும் காவிரியும், தென்பெண்ணை ஆறும் மழைக் காலங்களில் வெள்ளமாக சென்று கடலில் கலப்பதை தடுத்து தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும், கடந்த பத்தாண்டு காலமாக காவிரி ஓகேனக்கல்லில் உபரியாக செல்லும் தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம் (நீரேற்றும் திட்டம்) தருமபுரி மாவட்ட அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் நிரப்பும் திட்டம் தமிழக விவசாயிகள் சங்கம், அரசியல்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மூலம் கோரிக்கை வைத்தும், வலியுறுத்தப்பட்டும் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு ஏமாற்றமே இது வரை பரிசளிக்கப்பட்டு வருகின்றது. பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்து உபரியாக காவிரியில் கலக்கும் உபரி நீரை தொள்ளைக்காது நீர்தேக்கத்தில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும், 

அனுமன்தீர்த்தம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 2019-ல் அறிவிக்கப்பட்ட குமரன் அணைக்கட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என பல கோரிக்கைளை வலியுறுத்தியுள்ளனர். இதில் தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, மொரப்பூர், காரிமங்கலம், அரூர், கடத்தூர், பென்னாகரம், ஏரியூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய  ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!