மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே அடையாளம் தெரியாத ஆண் பிணம் ..!

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே  அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று இருந்துள்ளது.

அவ்வழியாக மாலை 5 மணி அளவில் நடைபயிற்சிக்கு  சென்ற நபர்கள் அவர் இறந்து கிடந்தது பார்த்தவுடன் தருமபுரி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவல் அறிந்து  சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர்  இறந்து கிடந்தவர் யார் என்று  விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.  இறந்து கிடந்த நபர் பாக்கெட்டில் அவருடைய தகவல் ஏதாவது உள்ளதா என காவல்துறையினர் தேடி பார்த்தனர் ஆனால்  அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காததால், உயிரிழந்த நபரை காவல்துறையினர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து  இறந்த கிடந்தவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக   எடுத்துச் சென்றனர்.  இது குறித்து தருமபுரி நகர காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!