பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியல்..!

பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள மருக்காரம்பட்டி, பவளந்தூர், ஜெல் மாரம்பட்டி, அட்ட பள்ளம், உப்பலாபுரம் ஆகிய கிராமங்கள் மலை சார்ந்த பகுதி ஆகும். இந்த கிராமங்களில் இருந்து 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.மேலும் அப்பகுதி சார்ந்த மக்களும் அன்றாட தேவைகளுக்கும், வேலைகளுக்கு செல்லவும் பஸ் போக்குவரத்தை நம்பி உள்ளனர். ஆனால் தினமும் காலை 8. 15 மணிக்கு செல்லும் பேருந்து 9:30 மணிக்குத்தான் பி.அக்ராகரம் பள்ளியை வந்து அடைகிறது. இதனால் மாணவர்கள் குறித்த நேரத்தில் வகுப்புக்கு செல்ல முடிவதில்லை என்று கூறுகின்றனர். மேலும் மாலை 6:30 மணிக்கு பி.அக்ராகரத்தில் இருந்து செல்லும் 26 சி பேருந்து இரவு  8 மணிக்கு மேல் தான் அவர்கள் இறங்கும் பகுதிகளுக்கு சென்று சேர்கிறது. பஸ்ஸிலிருந்து இறங்கும் மாணவர்கள் அங்கிருந்து அவர்கள் வீட்டிற்கு செல்ல  ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள்  கூடுதல் பஸ் வசதி கேட்டு திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர். அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!