தருமபுரியில் கிராம சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!
கிராம சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராஜேஸ்வரி, மாதம்மாள் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக 3000க்கும் மேற்பட்ட காலியாக உள்ள துணை சுகாதார நிலையங்களை பயிற்சி முடித்து பணிக்காக காத்திருப்பவர்களை கொண்டு எவ்வித நிபந்தனை இன்றியும் உடனடியாக நிரப்ப வேண்டும், கூடுதல் துணை மையப் பொறுப்பு பணிகளை பார்ப்பதற்கு நிர்பந்தம் கொடுப்பதை கைவிட வேண்டும், கிராம சுகாதார செவிலியர் நிலையில் இருந்து பகுதி சுகாதார செவிலியர் நிலைக்கு பதவி உயர்வில் செல்லும் சகோதரிகளை மீண்டும் துணை மைய பொறுப்பு பணிகளுக்கு உள்ளாக்குவதை தவிர்க்க வேண்டும், பகுதி சுகாதார செவிலியர்களுக்கு துணை மைய கூடுதல் பொறுப்புகள் வழங்குவதை கைவிட வேண்டும், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான அறிக்கைகள் காணொளி கூட்டங்களை முறைப்படுத்திட வேண்டும், பணி சுமை மன அழுத்தம் கொடுப்பதை கைவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர், கூட்டமைப்பு தமிழ்ச்செல்வி, மாவட்ட துணைத் தலைவர் மாலதி, மாவட்ட செயலாளர் தேன்மொழி, சிவப்பிரகாசம், துரை, சுப்புலட்சுமி மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment