ஆன்லைன் மூலம் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் கைது..!

காரிமங்கலத்தில் கோடிக்கணக்கில் பணம் வைத்து ஆன்லைன் மூலம் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்-செல்போனை ரகசியமாக கண்காணித்து கைது செய்த குற்றப்பிரிவு காவல் துறையினர்..!



 தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் ஆன்லைன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒருவரை தனிப்படை போலீஸார் கண்காணித்து கைது செய்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து ,எந்த விளையாட்டு வீரர் இந்த அணியில் இடம் பெறுவார் என்றும் ? ஒவ்வொருவரும் எத்தனை ரன் சேர்ப்பார்கள்? விக்கெட் விழுமா? யார் வெற்றி பெறுவார்கள்? இப்படி பல்வேறு அம்சங்களை அடிப்படையாக வைத்து சூதாட்டம் நடைபெறுவதை தருமபுரி சைபர்  குற்றபிரிவு காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் ஆன்லைன் ஐபிஎல் கிரிக்கெட் கேம்லிங்  நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதையடுத்து  காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (31) என்ற இளைஞரின் தொலைபேசியை கண்காணித்து ஆய்வு செய்ததில் ஆன்லைன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது,இதையடுத்து ஹரிபிரசாத்தை தனிப்படை போலீஸார்  கைது செய்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் இணையதளம் மூலம், பல கோடி ரூபாய்க்கு ஐபிஎல் போட்டி சூதாட்டம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், பல்வேறு நபர்களிடம் கமிஷன் பெற்றுள்ளதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட வந்த நபரிடம்  போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!