தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் மூன்றாம் இடம்..!
பொ.மல்லாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் மூன்றாம் இடம்..!
தருமபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் டிசம்பர் 26 தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் SIDP 2.0 ன் படி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கார்த்திக், சஞ்சய் குமார் ,ராகவன், சுஜித் குமார் ஆகியோரின் கண்டுபிடிப்பு மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தமைக்கான பரிசுத்தொகை ரூபாய் 10 ஆயிரம் காசோலையை தருமபுரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய ஜோதி சந்திரா வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின் போது அப்பள்ளியின் வழிகாட்டி ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் தமிழ் தென்றல் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலு ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இந்நிகழ்வை மாவட்ட தொழில் முனைவோர் மேலாளர் கௌதம் சண்முகம் சிறப்பாக வழி நடத்தினார்.

Comments
Post a Comment