உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்..!
தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாயில் மே உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நாயக்கன்கொட்டாயில் மே உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் வழியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஆர். ஜே. பி. ஜான்சன் பாபு முன்னாள் சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அம்பேத்கர் மீது பற்று கொண்டவர் பல பகுதிகளும் மாவட்டத்திலும் அம்பேத்கர் சிலையை நிறுவியவர் அம்பேத்கர் வரலாற்றையும் ஜெய் பீம் என்ற வாக்கியத்தை விரிவாக எடுத்துரைத்து பேசினார். இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் . தலைமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.சுரேஷ் மற்றும் அதியமான் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்கள் கிரிக்கெட் வாலிபால் புட் பால் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தர்மபுரி மாவட்ட தலைவர் சுரேஷ் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன். பிரபாகரன். பவுண்டேஷன் அமைப்பு நிர்வாகிகள் மு சண்முகம், சி சிலம்பரசன், சி சிவனேசன் மற்றும் பவுண்டேஷன் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது இதில் நாயக்கன்கொட்டாயில் ஏழை எளிய மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சிறப்பா அழைப்பாளர் ஆர். ஜே. பி. ஜான்சன் பாபு அவர்கள் பேசும்போது தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் அமைத்து தரப்படும் பள்ளி குழந்தைகள் அறக்கட்டளையின் சார்பில் உயர் கல்வி வரை படிக்க வைக்கப்படும் நாயக்கன்கொட்டாயில் இடம் தேர்வு செய்தால் அம்பேத்கர் சிலை அமைத்து தரப்படும் தமிழக அரசு காலணி நீக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களை கௌரவித்து மரக்கன்றுகளை வழங்கி மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இதில் நீலம் பண்பாட்டு மையம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment