பையர்நத்தம் ஊர் பகுதி மக்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..!

 தருமபுரி மாவட்டம், பையர் நத்தம் கிராமத்தில் ஊர் பொதுமக்களால் சேர்ந்து காளியம்மன் கோவில் ஊர் திருவிழா நடத்தப்பட்டது திருவிழாவுக்கு தலைமையேற்று சிறப்பு அழைப்பாளராக  டாக்டர்.ஆர்.ஜே.பி. ஜான்சன் பாபு   முன்னாள் ஒன்றிய சுயேச்சை கவுன்சிலர்  மற்றும் தொழிலதிபர் அவர்களை அவர் இல்லத்தில் இருந்து ஊர் தலைவர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் ஊர் பொதுமக்கள் வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றனர் பையர் நத்தம் ஊர்  பகுதி மக்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும்  50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி பருப்பு வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்கள் தொழிலதிபர் ஜான்சன் பாபு அவர்களால் இலவசமாக   ஏழை எளியோர்களுக்கு வழங்கினார். 

ஜான்சன் பாபு அவர்கள் இது போன்ற ஒவ்வொரு வருடமும் பையர் நத்தம்  ஊர் பகுதி மக்களுக்கு  நலத்திட்டங்கள் வழங்கி மற்றும் அப்பா அம்மா இல்லாத ஏழை குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்று பல மாணவர் மாணவிகளுக்கு உதவி செய்து வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஊனமுற்றோர் குடும்பத்திற்கு மருத்துவ செலவு ஏற்று  பல உதவிகள் செய்து வருகிறார். மேலும் ஆதரவற்றோர் குடும்பத்திற்கு நிதி வழங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டு  பொதுநலமாக செயல்பட்டு அம்பேத்கர் ஜெய் பீம் என்ற வாக்கியத்தை பின்பற்றி பல ஊர்களின் அம்பேத்கர் சிலையை அமைத்து வருகிறார் மேலும் பல நலத்திட்டங்களை வழங்கினார். பிறகு அவருக்கு பயர் நத்தம் ஊர் முக்கிய பொறுப்பில் இருக்கும் அனைவரும் மேடையில் ஆர்.ஜே.பி. ஜான்சன் பாபு அவர்களுக்கு பொன்னாடை செலுத்தி அவருக்கு நன்றி கூறும் வகையில் ஊர் பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!