தருமபுரியில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா..!

 தருமபுரியில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா..!

தருமபுரி கடைவீதி, குமாரசாமிபேட்டை, அன்னசாகரம் ஆகிய பகுதியில் உள்ள முருகன் திருக்கோயில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை தொடர்ந்து தருமபுரி கடை வீதியில் உள்ள ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய மருத வானேஸ்வரர் திருக்கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த 22- ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான (27/10/2025) திங்கட்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமி மற்றும் சூர பத்மநாபன் புறப்பாடு நிகழ்ச்சி வானவேடிக்கையுடன் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சூரபத்மனை முருகப்பெருமாள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு உபகர பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை (28/10/2025) காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றது . இதை தொடர்ந்து இரவு ஏழு மணி அளவில் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் , சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!