தருமபுரி கிழக்கு மாவட்ட  திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்  ஆலோசனைக் கூட்டம்..!

 


தருமபுரி கிழக்கு மாவட்ட  அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் MGS வெங்கடேஸ்வரன்  வரவேற்றார்.

தருமபுரி கிழக்கு மாவட்ட  பொறுப்பாளர்  ஆ.மணி M P வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தொடர்பாக சிறப்புரை ஆற்றினார்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கே.ஆர்.சி செல்வராஜ்,பெ.ராஜகோபால், N.S.கலைச்செல்வன், D. கார்த்திக்,R.P.முத்தமிழன், G.அசோக்குமார்,தீ.கோடீஸ்வரன், தங்கச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள்  தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA,   P.தர்மச்செல்வன் மற்றும் தருமபுரி தொகுதி பார்வையாளர், டி.செங்குட்டுவன் Ex MLA, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் பாரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு, பாக, இளைஞரணி நிர்வாகிகள் பெரும் திரலாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கலந்துக்கொண்டனர்.

தருமபுரி மேற்கு நகர கழக பொறுப்பாளர் கௌதம் நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!