Posts

Showing posts from February, 2022

மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற காவலர் சாலை விபத்தில் மரணம் ஏற்பட்டது.

Image
 இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 30-9-2021 ஆண்டு மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற காவலர் சாலை விபத்தில் மரணம் ஏற்பட்டது.  அவருடன் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர்கள் 2011 ஆம் ஆண்டு சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து ராஜ்குமார் குடும்பத்திற்கு Rs 2455102/- ரூபாயினை அவருடைய மனைவி திருமதி தமிழ்ச்செல்வி யிடம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.கலைச்செல்வன் ஐபிஎஸ் அவர்கள் வழங்கினார்.  2011ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் உடனிருந்தனர். பட்டினப்பாக்கம் காவல் நிலை யத்தை சேர்ந்த தேவேந்திரன் மகன்  கிஷோர் (10) சிறு நீராக மாற்று அறுவை சிகிச்சைக்காக மறைந்த தெய்வத்திரு ராஜ்குமார் அவர்களின் மனைவி தமிழ்ச்செல்வி அவர்கள் 100000/- ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கி உள்ளார்கள்.

புதுச்சேரியில் முதல்முறையாக ஜாலி ஹோமில் தங்கி படிக்கும் 150 குழந்தைகளுக்கு சிறப்பு காட்சியை அஜித் ரசிகர்கள் நேற்று ஏற்பாடு செய்தனர்.

Image
 ஹோமில் தங்கிப் படிக்கும் 150 குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்துச் சென்ற அஜித் ரசிகர்கள்- வலிமை பார்த்து உற்சாகம். புதுச்சேரியில் முதல்முறையாக ஜாலி ஹோமில் தங்கி படிக்கும் 150 குழந்தைகளுக்கு சிறப்பு காட்சியை அஜித் ரசிகர்கள் நேற்று ஏற்பாடு செய்தனர். புதுச்சேரியில் அஜீத் நடித்த வலிமை திரைப்படம் 15 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜாலி ஹோமில் தங்கி படிக்கும் 150 நரிக்குறவர் இன குழந்தைகளுக்கு புதுச்சேரி நகரிலுள்ள ஷண்முகா திரையரங்கில், GOD'S CHILDREN" என்ற பெயரில் சிறப்பு காட்சிக்கு புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி அஜீத் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நேற்று காலையில் திரையரங்கத்துக்கு ஆர்வமுடன் குழந்தைகள் வந்து காலை காட்சியை பார்த்தனர்.

துப்புரவு தொழிலாளி மீது மரம் சாய்ந்து விபத்து : மேம்பாலப் பணிக்காக மரத்தை அகற்றிய போது விபரீதம்..!

Image
துப்புரவு தொழிலாளி மீது மரம் சாய்ந்து விபத்து : மேம்பாலப் பணிக்காக மரத்தை அகற்றிய போது விபரீதம்..! கோவை உக்கடம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக மரத்தை அகற்ற முயன்ற போது துப்புரவுத் தொழிலாளி மீது மரம் விழுந்த விபத்தில் அவர் படுகாயமடைந்தார்.கோவை உக்கடத்தில் இருந்து பேரூர் பைபாஸ் சாலையில் ரவுண்டானா பாலம் அமைய உள்ளதால், சி.எம்.சி காலனி பகுதியிலிருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு,அங்கு வசித்து வந்த மக்கள் குடிசை மாற்று வாரியத்திற்கு மாற்றப்பட்டனர்.இந்த நிலையில்,மேம்பாலம் அமைப்பதற்காக சி.எம்.சி காலணி பகுதியிலிருந்த அரச மரத்தை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த அரச மரம் சாய்ந்தது. அப்போது அருகே நின்று கொண்டிருந்த மாநகராட்சி துப்புரவு பணியாளரான சுரேஷ் என்பவரது மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது.இதில் அவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் ராட்சத மரத்தை அப்புறப்படுத்தினர்.   மேலும், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுரேஷை கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார் எ...

தமிழக குடும்ப அட்டை தாரர்களுக்கு அரசு உத்தரவு..!

Image
 தமிழக குடும்ப அட்டை தாரர்களுக்கு அரசு உத்தரவு..! தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரேசன் கடைகளில் ஆதார் இணைய தரவு தளம் இயங்கவில்லை, விரல் ரேகை சரியாக பதியவில்லை என குடும்ப அட்டைதாரர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து கைரேகை பதிவு செய்ய இயலாவிட்டால், இதர வழிமுறைகளில் உரிய பதிவுகளை மேற்கொண்டு. பொருட்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

தருமபுரியில் மூன்றாம் அலை கொரோனா மற்றும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சரம்..!

Image
  தருமபுரியில் மூன்றாம் அலை கொரோனா மற்றும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சரம் தருமபுரி மாவட்டத்தில்  அரசு உயர் நிலைப் பள்ளி, ஆலமரத்துப்பட்டி, டீஸ்டால், சிட்லகாரம்பட்டி பஸ் நிறுத்தம், பாப்பாரப்பட்டி ரோடு, அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில், பென்னாகரம் ரோடு, பாப்பாரப்பட்டி ஆகிய பல்வேறு இடங்களில்  இணை இயக்குனர் மேற்கு மண்டலம் அவர்களது உத்தரவின்படியும், தருமபுரி மாவட்ட அலுவலர் அவர்களது அறிவுரையின்படியும், தீ தடுப்பு குழு நிலைய அலுவலர் கு.குணசேகரன் தலைமையில் கொரோனா பரவல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை  விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். தீயை அணைக்கும் முறைகள்,தீயின் வகைகள், முதலுதவி, தீ அணைப்பான் பயன் முறைகள், நீரில் மூழ்கியவரை காப்பாற்றும் முறை,இடி, மின்னல் சமயங்களில் எப்படி காப்பாற்றிக்கொள்வது, கேஸ் சிலிண்டர் தீ விபத்து, மின் தீ விபத்துகள், மற்றும் எவ்வாறு தீயை தடுப்பது  மற்றும் அணைப்பது என்று  பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் அவர் பல்வேறு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும்...

இலவசமாக 3.4 லட்சம் மதிப்புள்ள குடிநீர் இயந்திரங்கள் மற்றும் எல்இடி டிவிகள் வழங்கப்பட்டுள்ளது.

Image
 தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பாளையம்புதூர் அருகில் இயங்கி வரும் பிரைவேட் நிறுவனத்தின் CSR Corporate Social Responsibilites மூலமாக கீழ்வரும் அரசு பள்ளிகளுக்கு பாளையம்புதூர் சுங்க சாவடியின் திட்டத் தலைவர் சிவகுமார் அவர்களின் தலைமையில் இலவசமாக 3.4 லட்சம் மதிப்புள்ள குடிநீர் இயந்திரங்கள் மற்றும் எல்இடி டிவிகள் வழங்கப்பட்டுள்ளது. 1. அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஏலகிரி 43 இன்ச் எல்இடி டிவி 3 2. அரசினர் மேல்நிலைப்பள்ளி மானியாதஹள்ளி, ஜருகு 43 இன்ச் எல்இடி டிவி 3 3. அரசு துவக்கப்பள்ளி வெள்ளக்கல் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று மற்றும் 43 இன்ச் எல்இடி டிவி 1. 4. அரசு துவக்கப்பள்ளி சமத்துவபுரம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று. 5. அரசு நடுநிலைப்பள்ளி தடங்கம் 43 இன்ச் எல்இடி டிவி ஒன்று குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று மற்றும் மரக்கன்றுகள் நட்டு பல்வேறு நன்கொடைகளை வழங்கினார்கள். இதில் நிர்வாகம் மற்றும் கணக்குத் துறை மேலாளர் ஜோஸ்லின் ஸ்மைல், சுங்க சாவடி இயக்க மேலாளர் அருண்குமார், சாலை பாதுகாப்பு QQஅலுவலர் ஞானசேகர், பொறியாளர் சதீஷ்குமார், சாலை மேற்பார்வையாளர் முருகன், க...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.

Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து இல்லம் திரும்பும் வழியில், இந்திய விடுதலைப் போரில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட விடுதலைப் போரில் தமிழகம் என்ற மூன்று அலங்கார ஊர்திகளை சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலை, விவேகானந்தர் இல்லம் அருகே, பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை, திருவல்லிக்கேணி - ரேக்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, இ.வி.இ. மெட்ரிகுலேஷன் பள்ளி, என்.கே.டி. நேஷ்னல் ஆண்கள் பள்ளி, மயிலாப்பூர் - பி.எஸ். பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ, மாணவியர்கள் கண்டுகளித்து கொண்டிருந்ததை கண்டு, முதலமைச்சர் தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி அங்கிருந்த மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி மாணவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.

மாநில தேர்தல் ஆணையாளருடன்... வீடியோ கான்பிரன்சிங் மூலம் தேர்தல் பார்வையாளர்..!

Image
 திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையாளருடன்... வீடியோ கான்பிரன்சிங் மூலம் தேர்தல் பார்வையாளர், ஆட்சியர், எஸ்.பி., பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.                                                        

நிருபர்களிடம் வாக்குவாதம் செய்து ஒருமையில் பேசிய வாக்குசாவடி அலுவலர்..!

Image
நிருபர்களிடம் வாக்குவாதம் செய்து ஒருமையில் பேசிய வாக்குசாவடி அலுவலர்..! தர்மபுரி நகராட்சி 29 எ வது வார்டு பகுதியில் தர்மபுரி எம்பி மற்றும் மாஜி எம்பி வாக்களிப்பதை செய்தி சேகரிக்க காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் 29 எ  வார்டு ஆண்கள் வாக்குப் பதிவு செய்யும் வாக்குச்சாவடியில் நிருபர்கள் செய்தி சேகரிக்க சென்றனர். அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்களை பணியில் இருந்த வாக்குச்சாவடி அலுவலர் ஒருமையில் பேசி கூச்சலிட்டார். செய்தியாளர்கள் அடையாள அட்டையை காண்பித்தும் வெளியே செல்லுங்கள் என ஒருமையில் பேசினார் இதனையடுத்து சக செய்தியாளர்கள் வாக்குச்சாவடி அலுவலர் அடாவடித்தனத்தில் ஈடுபடுவது தவறு என்றும் ஏற்கனவே இரண்டு தனியார் தொலைக்காட்சி நிருபர்களிடம்  காலை 7 மணி முதலே இவர் ஒருமையில் பேசி அடாவடி செய்துள்ளார் தொடர்ந்து செய்தியாளர்கள் செய்தி எடுக்க சென்ற போதும் அவர் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசியதுயடுத்து அங்கு வந்த போலீசார் செய்தியாளர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதே வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி முகவர்கள் எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் வாக்குச்சாவடி முகவர...

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் DGP சைலேந்திர பாபு அவர்கள் இன்று சென்னை மாநகராட்சியில் வாக்கு செலுத்தினார்.

Image
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் DGP சைலேந்திர பாபு அவர்கள் இன்று சென்னை மாநகராட்சியில் வாக்கு செலுத்தினார். உங்கள் அடுத்த ஓட்டு இந்த பூமியின் மறுபக்கத்தில் இருக்கலாம். ஆனால் நகர்புற உள்ளாட்சி வாக்கை இன்று பதிவு செய்யுங்கள் எனக் கூறினார்.

தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Image
சென்னை  தேனாம்பேட்டை  எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆர்வமுடன் வாக்களிக்க வந்தவர்கள் இயந்திரம் பழுதடைந்ததால் ஏமாற்றம்..!

Image
ஆர்வமுடன் வாக்களிக்க வந்தவர்கள் இயந்திரம் பழுதடைந்ததால் ஏமாற்றம் : வாக்களிக்க ஏதுவாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு..! ஈரோடு மாவட்டம் : சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 23 வது வார்டில் பொதுமக்கள் வாக்களிக்க வை க்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்கு பதிவு செய்ய சுமார் 50 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்கு உண்டான வாக்குப்பதிவு தொடங்கி வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் 23வது வார்டில் உள்ள பொதுமக்கள் வாக்கு பதிவு செய்ய வைத்திருந்த வாக்கு இயந்திரம் பழுதடைந்து சுமார் 50 நிமிடங்கள் கழித்து சரிசெய்யப்பட்டது. இதனால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. வாக்கு இயந்திரம் பழுதடைந்து 50 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதால் அந்த வா...

முதல் முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு முக்கல் நாயக்கன்பட்டியில்

Image
 தருமபுரி மாவட்டம் முக்கல்   நாயக்கன்பட்டியில்  முதல் முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு விழா -2022