Posts

Showing posts from March, 2022

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் மடம் சோதனைச் சாவடியில் இருந்து வாகன பேரணி நடத்தி ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Image
 காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் மடம் சோதனைச் சாவடியில் இருந்து வாகன பேரணி நடத்தி ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசு மேகதாதுவில்  அணை கட்டுவதை தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது வழக்கு நிலுவையில் உள்ளபோதே கர்நாடக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அணையை கட்ட மும்முரம் காட்டி வருகிறது இதனை கண்டிக்கும் வகையில் இன்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் ஒன்று திரண்டு தர்மபுரி மாவட்டத்தில் ஒன்று கூடி    கர்நாடக அரசை கண்டித்தும் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட உறுதுணையாக உள்ள மத்திய  அரசை கண்டித்தும் பென்னாகரம் அடுத்து மடம் சோதனைச் சாவடியில் இருந்து வாகனப் பேரணி நடத்தி ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் இருபதிற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரத்தை அடியோடு அழிக்கு...

ஏப்ரல் 1-ந் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி..!

Image
 ஏப்ரல் 1-ந் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 1-ந் தேதி முதல் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, நிஜபாத தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான தரிசன டிக்கெட், ஆர்ஜிதசேவை டிக்கெட்டுகள் கடந்த 20-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் திருமலையில் உள்ள சி.ஆர்.ஓ. அலுவலகத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும், இதற்காக ஒரு நாள் முன்னதாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் பதிவு செய்தால், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும். அதேபோன்று வருகிற 1-ந் தேதி முதல் பி.ஏ.சி-1-ல் பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Image
  தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் கே எஸ் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கே வி  சின்னசாமி, மாநிலத் துணைத் தலைவர் என்எஸ் செந்தில், தருமபுரி மாவட்ட செயலாளர் கே சக்திவேல், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பி ஸ்ரீராம் ரெட்டி, மாவட்ட செயலாளர் சென்னை நாயுடு, டிராக்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் எம்எஸ் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பேராசிரியர் ஏ எஸ் சின்னசாமி அவர்கள்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழக விவசாயிகள் சங்கத்தின் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த கூட்டத்தின் மூலமாக தமிழக அரசுக்கு சில கோரிக்கைகள் வைக்கிறோம்.  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கூட்டுறவு பயிர்கடன் அதேபோல நகை கடன் தள்ளுபடி அந்த காலக்கெடுவை நீட்டித்து அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி கிடைக...

10 +1 & +2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

Image
 10, +1 & +2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் அதாவது மார்ச் 9 முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள மே 2022, 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (+1) தேர்வெழுதி பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதுவதற்கும், முதலாம் ஆண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். மே 2022, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், மார்ச் 9 ஆம் ...

சேலத்தில் 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

Image
 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது சேலத்தில் 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது. சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தொழிலாளி ஒருவர், தனது அக்காள் மகளான 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அந்த சிறுமியை பிரசவத்துக்காக நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே சிறுமிக்கு 15 வயது மட்டுமே ஆவதால், ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார், அந்த சிறுமியின் கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்திய விடுதி வாடர்ன் கைது

Image
 மாணவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்திய விடுதி வாடர்ன் கைது திருவண்ணாமலை  மாவட்டம்ஆரணி அருகே அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு ஓரினச்சேர்க்கை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விடுதி துணை காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆரணி அருகே பத்தியாவரம் கிராமம் சூசை நகர் பகுதியில் புனித வளனார் ஆண்கள் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகாமையில் பள்ளிக்கான விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் வெளியூரிலிருந்து வந்த 113 மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்று விடுதியில் தங்கி பயின்று வரும் 9,10,11,12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் திருவண்ணாமலை சமூக நலத்துறைக்கு இணையதளம் மூலம் புகார் ஒன்று அளித்துள்ளனர். அதில், விடுதி துணை காப்பாளர் துரைப்பாண்டி(35) என்பவர் இங்கு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை ஓரின சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக குறிப்பிட்டிருந்தனர்.இந்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட ...

சேலத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து 40 பேர் படுகாயம்

Image
 சேலத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து 40 பேர் படுகாயம்   சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பகுதியில் செல்லும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாரதவிதமாக பள்ளத்தில் இறங்கியது.சேலம் அயோத்தியாபட்டினம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் சேலத்திலிருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாரதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் உள்ள தென்னை மரத்தில் மோதி பள்ளத்தில் இறங்கி நின்றது. ஞாயிற்றுக்கிழமை திருமண முகூர்த்த நாள் என்பதால் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. பேருந்து விபத்துக்குள்ளானதும் அப்பகுதியில் இருந்த இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அவ்வழியே வந்த வாகனங்கள் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், இர...

அதிவேகத்தில் சென்ற கனிமவள லாரி சென்டர் மீடியனில் இடித்து விபத்து

Image
 அதிவேகத்தில் சென்ற கனிமவள லாரி சென்டர் மீடியனில் இடித்து விபத்து கன்னியாகுமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு பெருமளவு கனிமவள கடத்தல் நடந்து வருகிறது. கனரக வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் அதிக பாரம் ஏற்றி கனிம வளங்களை கடத்திச் செல்கிறது. தடுக்க வேண்டிய அதிகாரிகள் லஞ்சம் பெற்று அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை வழியனுப்பி வைத்து வருகின்றனர். பகல் மற்றும் இரவு வேளைகளில் மின்னல் வேகத்தில் அதிக பாரம் ஏற்றி கனிமவள லாரிகள் செல்வதால் பெருமளவு விபத்துக்கள் அதிகரித்து உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை தக்கலை காவல் சரகத்திற்கு உட்பட்ட வெள்ளி கோடு, இரட்டை விளை ஆபத்தான வளைவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனில் அதிவேகமாக சென்ற கனிமவள கடத்தல் லாரி இடித்து சென்டர் மீடியனை சேதப்படுத்தி நடுரோட்டில் நின்றது. ஆனால் அந்த இடத்திற்கு போலீசார் வரவோ தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே வாகனம் நிற்பதையும் கண்டு கொள்ளவும் இல்லை. இதுவே வேறு ஏதாவது வாகனங்களால் இருந்தால் போலீசார் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து இருப்பார்கள்.  ஆனால் மாதாமாதம் ஒவ...

ஆவடி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் தேசிய மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது

Image
 ஆவடி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில்  தேசிய மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அனைவருக்கும் அருசுவை விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி விழாவிற்கு அரசு, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ் வரவேற்று உரையாற்றினார். பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் அப்துல் ஜாஃபர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தேசிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார். மேற்படி நிகழ்ச்சிகள், ஆவடி மாநகராட்சி 42வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி, பூந்தமல்லி நகர்மன்ற உறுப்பினர் நேகராஜ், அன்பு எத்திராஜ் மற்றும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் குப்புராஜ் மற்றும் அனைத்து ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர். விழாவினை சிறப்பித்தனர் பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் பரிசுகள் வழங்கி மகிழ்வித்தனர்.

ஆவடி அருகே, திருநின்றவூர் பகுதியில் நாட்டு நலப்பணி, திட்ட குழு சார்பாக சாலை விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.

Image
ஆவடி அருகே, திருநின்றவூர் பகுதியில் நாட்டு நலப்பணி, திட்ட குழு சார்பாக சாலை விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் மார்க்கெட் காந்தி சிலை அருகே நாட்டு நலப்பணி திட்டம் அலுவலர்கள் மணவாளன் எஸ் ராதா அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில்  நாட்டு நலபணி திட்ட குழு மாணவ மாணவிகள் இணைந்து  பேரணியில் கலந்து கொண்டனர். இந்தப் பேரணிக்கு சிறப்பு அழைப்பாளராக ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி திருநின்றவூர் காந்தி சிலையில் ஆரம்பித்து லட்சுமி திரையரங்கம் வழியாக நத்தமேடு பாலவேடு பகுதியாக பாக்கம் கிராமம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஸ்ரீராம் கலை கல்லூரி மற்றும் நாட்டு நல பணி திட்ட மாணவ மாணவிகளும் 100க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகையை கையில்  ஏந்தி கோஷங்கள் எழுப்பி அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் சாலையில் பாதுகாப்பாக செல்ல வேண்டும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது இரண்டுபேரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்றனர் இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி...

மயான கொள்ளை திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது

Image
 சென்னை திருமுல்லைவாயலில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சிவா விஷ்ணு ஆலயத்தில் மயான சூறை வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.  ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் இல் புகழ் பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் நடைபெறும் மயான கொள்ளை திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. 34ஆம் ஆண்டு முன்னிட்டு ஆலயத்தில் ஏராளமான பெண்கள் மாவிளக்கிட்டு வழிபாடு நடத்தினர். சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், நடைபெற்றது. பின்னர் அங்காளம்மன் சுவாமி  வீதி வீதியாக ஊர்வலமாக வந்து   மயானத்தை அடைந்தது. மயான கொள்ளையில் பக்தர்கள் வேண்டுதலாக விரதம் இருந்து காணிக்கையாக வழங்கிய கிழங்கு வகைகள், நவதானிய வகைகள் வைக்கப்பட்டிருந்தன. சுவாமி தீபாரதனைக்கு பிறகு கொள்ளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கிழங்கை பக்தர்கள் உண்ணுவதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிடைக்கும் இதில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆவடி மாநகராட்சி பதவி ஏற்பு விழாவில் மாநகராட்சி அலுவலகம் திருமணமண்டபம் போல் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது

Image
 ஆவடி மாநகராட்சி பதவி ஏற்பு விழாவில் மாநகராட்சி அலுவலகம் திருமணமண்டபம் போல் அலங்கரிக்கப்பட்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் களுக்கு வரவேற்பு அளித்தனர் மாமன்ற உறுப்பினர்கள் நலத்திட்ட பணிகளை நிறைவேற்றினால் நீங்களும் அமைச்சர் மற்றும் நாடாளமன்ற உறுப்பினர் ஆகலாம் என  அமைச்சர்  சா .மு நாசர் வார்டு உறுப்பினர்களை வாழ்த்தி ஆலோசனை வழங்கினார். சென்னை புறநகர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது தற்போது பதவி ஏற்பு விழா தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் உள்ள ஒரே  மாநகராட்சியாக உள்ள ஆவடி மாநகராட்சியில் 48 வார்டு உறுப்பினர் பதவி ஏற்பு விழா  மாமன்ற கூட்டரங்கில் தமிழ் தாய் வாழ்த்து பாடி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பால் துறை அமைச்சர் சா. மு.நாசர் ,மற்றும்  திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், கலந்து கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஆவடி மாநகராட்சி ஆணையர் தேர்தல் பணி அதிகாரி சரஸ்வதி உள்ளிட்ட அதிகாரிகள்  செய்திருந்தனர் . மாநகராட்சி பதவி ஏற்...

தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் 69ஆவது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

Image
  தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் 69ஆவது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வில்லிவாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளானூர் ஊராட்சி கழக செயலாளர் வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலர் குணா தயாநிதி அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளர்கள் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சுதர்சனம் பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் வில்லிவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் அயப்பாக்கம் துரை வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி  திமுக கழக கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் இலவச வேட்டி சேலையும் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் கழக கிளை நிர்வாகிகள் எம் ஆனந்தன் என் கவர்னர் டி வெங்கடேசன் டீ பாலமுருகன் எம் நாகையன் பொன் மகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.