Posts

Showing posts from April, 2022

தீ தடுப்பு, முதலுதவி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்..!

Image
தீ தடுப்பு, முதலுதவி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்..!   தருமபுரியில்  அரசு உயர்நிலைப்பள்ளி பென்னாகரம் ரோடு பி.அக்ரகாரம், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கார்மென்ட்ஸ் பென்னாகரம் ரோடு இண்டூர், மகாலட்சுமி ப்ரூட்ஸ் பேருந்து நிலையம் இண்டூர் ஆகிய இடங்களில் இணை இயக்குனர் மேற்கு மண்டலம் அவர்களது உத்தரவின்படியும், தருமபுரி மாவட்ட அலுவலர் அவர்களது அறிவுரையின்படியும்,தீ தடுப்பு குழு நிலைய அலுவலர் கு.குணசேகரன் தலைமையில் கொரோனா பரவல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை  விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.  தீயை அணைக்கும் முறைகள்,தீயின் வகைகள், முதலுதவி, தீ அணைப்பான் பயன் முறைகள், நீரில் மூழ்கியவரை காப்பாற்றும் முறை,இடி, மின்னல் சமயங்களில் எப்படி காப்பாற்றிக்கொள்வது, கேஸ் சிலிண்டர் தீ விபத்து, மின் தீ விபத்துகள், மற்றும் எவ்வாறு தீயை தடுப்பது  மற்றும் அணைப்பது என்று அரசு பள்ளி மாணவர்களுக்கு மற்றும்  பொதுமக்களுக்கும் அவர் பல்வேறு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் செய்முறை விளக்கத்த...

அம்பத்தூர் அருகே நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் கோப்பைகளை மேயர் பிரியா ராஜன் வழங்கினார்

Image
 சென்னை அம்பத்தூர் அருகே நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் கோப்பைகளை மேயர் பிரியா ராஜன் வழங்கினார். சென்னை அம்பத்தூர் அடுத்த கருக்கு பகுதியில் இயங்கி வரும் ஏ க்யூப் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.  இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப் சாமூவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதனை தொடர்ந்து கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை மேயர் பிரியா ராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மணடல குழு தலைவர் பிகே மூர்த்தி, கிழக்கு பகுதி செயலாளர் எம்.டிஆர். நாகராஜன், தலைமை குழு உறுப்பினர், ரமேஷ் என்கின்ற நீலகண்டன் மற்றும், விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.

சென்னை மதுரவாயலில் நடைபெற்ற அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தலில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியின்றி தேர்வு

Image
 சென்னை மதுரவாயலில் நடைபெற்ற அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தலில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியின்றி தேர்வு நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம். தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களுக்கான அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் மதுரவாயலில் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் ஊரகத் தொழில் துறை அமைச்சரும்,மாவட்ட கழக செயலாளருமான பா.பெஞ்சமின் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பச்சையம்மாள்,மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், ஆகியோரிடம் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை வழங்கினார். இத்தேர்தலில் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் பென்ஜமி...

சென்னையிலிருந்து கடையம் நோக்கி மகாகவிபாரதி அவர்களின் துணைவியாருடன் , இருப்பதுபோல் திரு உருவ சிலை ரதயாத்திரையை..!

Image
  சென்னையிலிருந்து கடையம் நோக்கி மகாகவிபாரதி அவர்களின் துணைவியாருடன் , இருப்பதுபோல் திரு உருவ சிலை ரதயாத்திரையை பாரதியாரின் தங்கையின் கொள்ளுபேத்தி  கொடியசைத்து துவக்கி வைத்தனர். சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் கசுவா பகுதியில் சேவாலயா தொண்டு நிறுவனத்திலிருந்து பாரதியாரின் தங்கையின் கொள்ளுப் பேத்தி கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல் பயணமாக செங்கல்பட்டு வழியாக பாண்டிச்சேரி விழுப்புரம் உளுந்தூர்பேட்டை ,  எட்டயபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மக்களின் வாழ்க்கையோடு வாழ்ந்து தொடர்புடைய அனைத்து இடங்களிலும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டுள்ள இடங்களில்அவரின் மனைவி செல்லம்மா பிறந்த ஊரான கடையத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதி துணைவியாருடன் 2 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார், ஆனால் அதற்கான தடயங்கள் எதுவும் இப்பொழுது இல்லை என்பதால், இதனை போக்கும் வகையில் கடையத்தில் மகாகவி நினைவை நிலைக்கச் செய்யவேண்டும் என்ற திட்டத்தை ஆவடி அடுத்த பக்கம்  கசுவா பகுதிகள் அமைந்துள்ள சேவாலயா தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர் திரு முரளிதரன் அவர்களால் தொடங்கியது...

ஆவடி விமானப்படை மூலம் மோரை ஜெ. ஜெ நகர் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Image
 ஆவடி விமானப்படை மூலம் மோரை  ஜெ. ஜெ நகர் பகுதியில்  வசிக்கும்  ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. சென்னை புறநகர் பகுதியான ஆவடி  அடுத்த மோரை ஜே ஜே நகர் கிராமத்தில் சாட்டையடி தொழில் செய்யும்  பகுதி ஏழை எரிய மக்களுக்கு விமானப்படை படை AOC ஏர் கமாண்டர் சிவகக்குமார் , அவர்கள் ஏற்பாட்டில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் தலைவர்  அவுவா  லோக்கல்  திருமதி ஷீபா சிவகுமார், குரூப் கேப்டன், தலைமை நிர்வாக அதிகாரி பொற்செல்வன், மற்றும் விங் கமாண்டர் மருத்துவ உயர்  அதிகாரி அனுபம் திமொதி,  ஆகியோர் கலந்து கொண்டு   அங்குள்ள எழை எளிய மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமில் , ரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை, பல் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை கிட்டப்பார்வை தூரப்பார்வை, மற்றும் பொது சிகிச்சைக்கான மருத்துவ மற்றும் மருந்து மாத்திரைகள் 200கும் மேற்பட்ட ஏழை குடும்பத்தை சார்ந்த பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவ முகாமை விமானப்படை  மருத்துவ குழு மருத்துவர்கள், செவிலியர்கள் என, 50க்கும் மேற்பட்ட விமானப்படை மருத...

ஆவடி அருகே டாக்டர் அம்பேத்கர் ,அவர்களின் திருஉருவ சிலை திறப்பு விழா ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி திறந்து வைத்தனர்.

Image
 ஆவடி அருகே டாக்டர் அம்பேத்கர் ,அவர்களின் திருஉருவ சிலை திறப்பு விழா ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி திறந்து வைத்தனர். சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பட்டாபிராம் நிமிலிச்சேரி பகுதியில் டாக்டர் பாபா சகோ அம்பேத்கர் அவர்களின் 131 பிறந்தநாள் விழா முன்னிட்டு டாக்டர் அம்பேத்கார் சங்கத்தின் சார்பாக ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி புதிதாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவச் சிலை அமைத்து மணிமண்டபம் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி டாக்டர் அம்பேத்கார் அவர்களின் புதிதாக நிறுவப்பட்ட திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  பின்னர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி கேக் வெட்டி கொண்டாடினார் இந்நிகழ்ச்சியில் நிமிலிச்சேரி கிராம மக்கள் ஒன்றிணைந்து சிறப்பான முறையில் கொண்டாடினர்.

தமிழ்நாடு , கம்ம நாயுடு வடுகர் இனத்தவரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும்...!

Image
 தமிழ்நாடு , கம்ம நாயுடு வடுகர் இனத்தவரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு கம்ம குல குடும்ப விழாவில் மாநிலத் தலைவர் ரவீந்திரன் கொங்கு நாயுடு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருநின்றவூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கம்மா நாயுடு கமகுல யுகாதி தின குடும்ப விழா ஏ கே ரோஸ் நாயுடு அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் வெகு விமர்சியாக நடைபெற்றது இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கம்ம நாயுடு மாநிலத் தலைவர் ரவீந்திரன் கொங்கு நாயுடு மற்றும் மாநில செயல் தலைவர் மோகன் நாயுடு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் பேசுகையில் கம்ம நாயுடு சங்கம் சார்பில் ஒவ்வொரு ஊரிலும் கமகுல குடும்ப விழா யுகாதி தினத்தை முன்னிட்டு கம்ப நாயுடு, குடும்ப விழா நடைபெறுவதாகவும் சென்னையில் மட்டும் 50 மேற்பட்ட இடங்களில் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார் பின்னர் தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு கம்ம நாயுடு இனத்தவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்ட...

வேப்பம்பட்டு அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு - 500 க்கும் மேற்பட்ட சுற்று வட்டார பக்தர்கள் பங்கேற்பு

Image
வேப்பம்பட்டு அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு  - 500 க்கும் மேற்பட்ட சுற்று வட்டார  பக்தர்கள் பங்கேற்பு திருவள்ளூர் மாவட்டம்  வேப்பம்பட்டு புளிய மரத்து பேரூந்து நிறுத்தம் அருகில் உள்ள குளக்கரையில்  அமைந்துள்ளது  அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் இக்கோயிலின்  குடமுழுக்கு விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க  இவ்வூரைச் சுற்றியுள்ள வட்டாரப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து மனம் மகிழ்ந்தனர். இத்திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவிற்காக பல இலட்ச மதிப்பீட்டிலான புனரமைப்புத் திருப்பணிகள் நடைப்பெற்று, கடந்த சில நாட்களாக அதற்கான யாக குண்டசாலை அமைத்து சிவாச்சாரியார் மற்றும் வேத விற்பன்னர்கள் பங்கேற்று மந்திரம் முழுங்க யாக கால பூஜைகள் நடைபெற்று வந்தது . அதன் தொடர்ச்சியாக நேற்று காலை விக்னேஸ்வர பூஜை புண்ணியாகவாசனம் நான்காம் கால பூஜை யாகசாலை பூஜை விசேஷ திரவிய பூஜை செய்யப்பட்டு யாகச...

போரூரில் தீவிபத்தில் 17 இ-பைக்குகள் எரிந்து சேதம்

Image
 போரூரில் தீவிபத்தில் 17 இ-பைக்குகள் எரிந்து சேதம் சென்னை போரூரில் குன்றத்தூர் பிரதான சாலையில் ராஜாராம் என்பவர் இ-பைக் ஷோரூம் நடத்தி வருகிறார். இங்கு 5 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். போரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த ஷோரூமி்ல் இ-பைக்குகள் வாங்கியுள்ளனர். சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சலுகைகளுடன் பைக் விற்பனை நடைபெற்று வந்தது. மேலும் இவர்களிடம் பைக் வாங்கியவர்கள் சர்வீஸ் செய்வதற்காகவும் பைக்குகளை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை இந்த ஷோரூமில் உள்ள ஒரு இ-பைக்கிற்கு சார்ஜ் போட்டுள்ளனர். அப்போது எதி்ர்பாராதவிதமாக பைக்கில் உள்ள பேட்டரி வெடித்து தீப்பிடித்துள்ளது. இதைப் பார்த்த ஊழியர்கள் அலறியடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவியது. இதில் 5 புதிய இ-பைக்குகள், மற்றும் சர்வீஸ் செய்வதற்காக வந்த 12 பைக்குகள் என மொத்தம் 17 பைக்குகள் எரிந்து சேதமானது. மேலும் ஷோரூமிலிருந்த பொருட்களும் தீப்பிடித்து எரிந்து சேதமானது. இது குறித்து தகவல் அறிந்த விருகம்பாக்கம் தீயணைப்பு துறையினர், சம்ப...

ஆவடி ரயில் நிலையத்தில் ரயில் பாதுகாப்பு குறித்த மைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Image
 ஆவடி ரயில் நிலையத்தில் ரயில் பாதுகாப்பு குறித்த மைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. செல்போன் பேசிக்கொண்டே இருப்பு பாதையை கடந்து சென்றவர்களை ரயில்வே போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ரயில்வே இருப்பு பாதைகளை கவனக்குறைவாக கடப்பதால் ரயில் மோதி அதிக அளவிலான விபத்துக்கள் நடைபெறுகின்றன.இதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆவடி ரயில்வே போலீசார் சார்பில் தனியார் கல்லூரி மாணவர்கள் மூலமாக மைம் வாயிலாக செல்போன் பேசிக்கொண்டு இருப்பு பாதையை கடக்க கூடாது,இருப்பு பாதைகளில் செல்பி எடுப்பது,வீடியோ தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்பனவற்றை விளக்கும் விதமாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதனை அவ்வழியே பயணித்த பொதுமக்கள் நின்று கவனித்து சென்றனர். இதனை தொடர்ந்து இருப்பு பாதையில் செல்போன் பேசிக்கொண்டும்,வாகனங்களை ஒட்டிக்கொண்டு  வந்த சிலரை ரயில்வே காவலர்கள் பிடித்து அவர்களை  இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அம்பத்தூர் அருகே 200 அடி பைபாஸ் சாலையில் வழிப்பறி 82 லட்சம் கொள்ளை. மூன்று பேர் கொண்ட கும்பல் துனீகரம்

Image
அம்பத்தூர் அருகே 200 அடி பைபாஸ் சாலையில் வழிப்பறி 82 லட்சம் கொள்ளை. மூன்று பேர் கொண்ட கும்பல் துனீகரம். அம்பத்தூர் தொழிற்பேட்டை  200 அடி பைபாஸ் சாலைமேம் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த விஜயகுமார் வ/43 எடுத்துச் சென்ற  82 லட்ச ரூபாய் பணத்தை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் விஜயகுமார் என்பவரை  வழி மறித்து  கை,கால்,தலை உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை  அருகே 200அடி பைபாஸ் சாலை மேம்பாலத்தில் ஹோண்டா இருசக்கர வாகனத்தில் வானகரத்திலிருந்து மாதவரம் பால் பண்னையில் உள்ள சுரேன் இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனத்துக்கு சொந்தமான பணத்தை விஜயகுமார் எனும் ஊழியர் இரு  சக்கர வாகனத்தில் எடுத்து சென்ற போது மதுரவாயல் பைபாஸ் சாலையில் மதியம் ஒரு 1 அளவில்  மதுரவாயிலிருந்து பின் தொடர்ந்து வந்த கும்பல் விஜயகுமாரை அம்பத்தூர் தொழிற் பேட்டை அருகே மேம்பாலத்தின் மீது வைத்து சரமாரியாக தாக்கி வெட்டி 82 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர் உயிருக்குப் ப...

ஆவடி அடுத்த திருநின்றவூரில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக குருத்தோலை பவனி நடைபெற்றது

Image
 ஆவடி அடுத்த திருநின்றவூரில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக குருத்தோலை  பவனி நடைபெற்றது  இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ஆவடியை அடுத்த திருநின்றவூரில் திருவள்ளூர் மாவட்டம் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக தந்தை மைக்கேல் பிரான்சிஸ், தந்தை ஷோஸ், தந்தை டேவிட் குருதாஸ் ஆகியோர் தலைமையில் குருத்தோலை ஞாயிறு யொட்டி பலட்சுமிபுரம் சீயோன் ஆலயத்திலிருந்து குருத்தோலை  பவனி  புறப்பட்டு சிஎஸ்ஐ ஆலயம் வழியாக பெரியபாளையம் சாலையில் உள்ள ஆர் சி சர்ச் வந்தடைந்தது.  ஆலயத்தில் பின்னர் பாதிரியார்கள் சிறப்பு ஜெபம் செய்து இயேசுவின் பாடல்கள் பாடினார் இந்தக் குருத்தோலை பவனிவிழாவில்    திருநின்றவூரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

அருள்மிகு துவாரக மாயி லட்சுமி சாய் பாபா கோவிலில் பாபாவின் பிறந்த நாள் சிறப்பு பூஜையில் திரையுலகினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Image
 ஆவடி காமராஜ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு துவாரக மாயி லட்சுமி சாய் பாபா கோவிலில் பாபாவின் பிறந்த நாள்  சிறப்பு பூஜையில் திரையுலகினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  சென்னை புறநகர் பகுதியான ஆவடி காமராஜ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு துவாரகமாயி லட்சுமி சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ ராமநவமி மற்றும் பாபாவின் பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திரை உலகின் நடிகர் ஸ்ரீராம்  சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 5 மணி அளவில் ஸ்ரீ சாய் பாபாவிற்கு காகட ஆரத்தி அபிஷேகம் கணபதி ஹோமம் பகல் ஆரத்தி பால்குட ஊர்வலம் மற்றும் 1008 சுமங்கலி வஸ்திரம்  மஞ்சள் குங்குமம் புடவை திரை உலகின் நடிகர் ஸ்ரீராம் வழங்கினார். பாபாவின் பிறந்த நாள் சிறப்பு பூஜையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன மற்றும் சின்னத்திரை நடிகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முதல் தருமபுரியில் மின் சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது

Image
 நேற்று முதல் தருமபுரியில் மின் சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  தருமபுரியில் முதன்முதலாக மின் சார ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பெங்களூரில் இருந்து ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்ட மின் சார ரயில் தற்போது தருமபுரி வரையிலும் மின் சார ரயில் இயக்கப்படுகிறது. பயணிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பயணிகள் போக வேண்டிய இடத்திற்கு குறைந்த நேரத்தில் சீக்கிரமாக சென்று அடைகின்றனர். இதனால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரூர் அடுத்த மேல் செங்கப்பாடியில் மர்மமான முறையில் மாடுகள் இறந்து வருகிறது

Image
அரூர் அடுத்த மேல் செங்கப்பாடியில் மர்மமான முறையில் மாடுகள் இறந்து வருகிறது தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மேல் செங்கப்பாடியில் தொடர்ந்து மர்மமான முறையில் சில நாட்களாக மாடுகள் இறந்து வருகிறது. இதுவரைக்கும் 10 -க்கும் மேற்ப்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதை தொடர்ந்து இன்று அரூர் மேல் செங்கப்பாடியே சேர்ந்த முருகன் என்பவரது பசுமாடு ஒன்று  இறந்துள்ளது. இதனால் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க கால்நடை மருத்துவர்கள்  உடனடியாக வந்து மாடு இறப்பதற்கு காரணத்தை பரிசோதனை செய்து நோய் தாக்கப்பட்டுள்ளதா இல்ல வேற ஏதேனும் காரணமா என்று எங்களுக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர். தொடர்ந்து மாடுகள் இறப்பதால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் சோகத்துடனும், அச்சத்துடனும் இருக்கின்றனர்.

தருமபுரி நான்கு ரோட்டில் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் அருகே, வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு தருமபுரி டிஎஸ்பி வினோத் அவர்கள், நீர் மோர் ஜூஸ் மற்றும் இளநீர் வழங்கினார்.

Image
 தருமபுரி நான்கு ரோட்டில் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் அருகே   வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு தருமபுரி டிஎஸ்பி வினோத் அவர்கள்  நீர் மோர் ஜூஸ் மற்றும் இளநீர் வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.