Posts

Showing posts from October, 2024

தீயணைப்புத் துறையினர் விபத்தில்லா தீபாவளி கொண்டதற்கான விழிப்புணர்வு பேரணி..!

Image
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விபத்துல்லா தீபாவளி கொண்டாடுவதற்காக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தருமபுரி தீயணைப்பு துறை அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணிக்கு தயாராக இருந்த வாகனங்களை தருமபுரி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அம்பிகா கோடியாசித்து தொடங்கி வைத்தார்.  இந்த வாகன பேரணியானது இலக்கியம்பட்டி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய வழியாக நான்கு ரோடு வரை விபத்தில தீபாவளி கொண்டாடுவதற்கான விழிப்புணர்வு துண்டு பிரச்சனைகள் வழங்கியும், புகை நமக்கு பகை, குழந்தைகளிடம் பட்டாசு பெட்டிகளை கொடுக்காதீர், பருத்தி ஆடை பயன்படுத்தவும், சாலையில் பட்டாசு வெடிக்காதீர்கள், குடிசை அருகில் பட்டாசு வெடிக்காதீர் இது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதவிகளை ஏந்திக்கொண்டு சாலையில் வாகன பேரணியாக சென்று மீண்டும் தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். இதுபோன்று மாவட்டத்திலுள்ள அனைத்து இடங்களிலும் விபத்துல்லா தீபாவளியை கொண்டாடுவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பூமிபூஜை மற்றும் முடியுற்ற பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ..!

Image
 தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மானியதஅள்ளி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் பொடாரான்கொட்டாய் அரசு துவக்கப்பள்ளியில் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது.  மேலும், மானியதஅள்ளி கடத்திக்குட்டை சிவபெருமான் கோவில் பகுதியில் ரூபாய் 2.80 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றிற்கு மின்மோட்டார், குடிநீர் பைப் லைன் மற்றும் மினி டேங்க் அமைக்கப்பட்டது.  இப்பணிகளை பயன்பாட்டிற்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி, கமலநத்தம் கிராமத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்காக பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில், பாமக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர் அறிவு, மாவட்ட துணைத் தலைவர் முத்துவேல் மற்றும் நிர்வாகிகள் பச்சியப்பன், மூர்த்தி உள்ளிட்ட தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்....

அரசு மதுபான கடை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ-விடம் மனு..!

Image
 தருமபுரி நகராட்சி, இராஜகோபால்கவுண்டர் தெரு, மீன் மார்க்கெட் பகுதியில் புதியதாக ஒரே நாளில் அரசு மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. மதுபான கடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் நகர பேருந்து நிலையம், மீன்மார்க்கெட், மருத்துவமனைகள், காய்கறி மார்க்கெட், உணவகங்கள், மோட்டார் பழுதுபார்க்கும் கடைகள், ஆட்டோ நிறுத்தம், தனியார் விடுதிகள், பல்வகை வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  மதுபான கடை அமைக்கப்பட்டுள்ள தெரு ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக அமைந்துள்ளது. இத்தெருவிற்கு அருகில் ஏற்கனவே அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தன. மது குடிப்பவர்கள் தொழில் செய்யும் கடை முன்பு மதுவை அருந்திவிட்டு கடை முன்பும், சாலையிலும் விழுந்துக்கிடக்கின்ற காட்சியெல்லாம் காணப்பட்டது. கடைகளின் முன்பு மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்பளர், வாந்தி எடுத்தல், மதுபாட்டிகள் உடைத்தல், பல்வேறு பிரச்சனைகள், பெண்களை கேலி செய்தல் போன்றவை நிகழ்ந்த காரணத்தால் அங்கிருந்த அரசு மதுபான கடை அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் மக்கள் கூடும் இடமான முதன்மை தெருவில் அரசு மதுபான கடை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மா...

ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி சதவீதம் கடந்த 10 ஆண்டுகளாக குறைவு ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி சைலேந்திரபாபு பேட்டி ..!

Image
தருமபுரி பென்னாகரம் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்கள், விஜய்ஸ் ஏஸ் அகாடமி ஆகியவை சார்பில் புதிதாக விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி. அகாடமி என்னும் மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கான பயிற்சி மையம் தருமபுரி முகமது அலி கிளப்  ரோடு, பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தின் 2-வது தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. இளங்கோவன் தலைமை தாங்கினார். தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம், சினேகாபிரவின், தலைமை செயல்பாட்டு அலுவலர் சந்திர பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜய்ஸ் ஏஸ் அகாடமி மூத்த முதல்வர் நாராயணமூர்த்தி வரவேற்றார்.  இதில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்து  அரசு தேர்வுகளில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து பேசினார். நடராஜ்  டி.என்.பி.எஸ்.சி. இன்ஸ்டியூட் இயக்குனர் நடராஜ், இன்ஸ்பயர் ஐ.ஏ.எஸ். அகாடமி  இயக்குனர் மாதேஸ்வரன், சி.ஆர்.பி.எப். ஓய்வு பெற்ற கமாண்டண்ட் ...

ஆதரவற்ற முதியோர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..!

Image
 தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி, எர்ரப்பட்டியில் சேவாலயா முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற நிலையில் வாழும் முதியோர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இலவச வேட்டி, சட்டை, புடவை மற்றும் இனிப்புகள் போன்றவற்றை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.  இதில் சேவாலயா நிர்வாகிகள், உதவும் உள்ளம் அறக்கட்டளை நிர்வாகிகள், பாமக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் செல்வ மாளிகை நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

நேரடியாக சென்று வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்த செளமியா அன்புமணி..!

Image
 தருமபுரி மாவட்டம் ; நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முனைவர் செளமியா அன்புமணி  பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் கரகதஅள்ளி, எர்ரனஅள்ளி, நல்லூர், பேவுஅள்ளி, கணபதி, பெலமாரனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு பேருந்து நிலையம், பேளாரஅள்ளி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி மாநில துணைத் தலைவர்கள் பாடிசெல்வம், பெ.சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாவட்ட தலைவர் செல்வகுமார், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, தேவேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் அன்பழகன், மாவட்ட அமைப்பு தலைவர் கிருஷ்ணன், மாவட்ட தேர்தல் பணிக்குழு வாசுநாயுடு, மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் சித்துராஜ், முன்னாள் வன...

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி..!

Image
தருமபுரி எலைட் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்திய போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி தொடக்க விழாவுக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி கவர்னர் சிவக்குமார், துணை கவர்னர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் விக்ரமன் வரவேற்றார். இந்த போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மகேஸ்வரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த போட்டிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தனியாக நடைபெற்றது. 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு உற்சாகமாக ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் குறிப்பிட்ட எல்லை வகுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள...

ரூ.27.14 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்..!

Image
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பங்குநத்தம் ஊராட்சி, சின்னபங்குநத்தம் மற்றும் இராஜாகொல்லஅள்ளி கிராமங்களில் தலா ரூபாய் 13.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் அமைக்கப்பட்டது.  இந்த அங்கன்வாடி மைய கட்டிடங்களை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ரிப்பன் வெட்டி திறந்து, பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் சுகந்திபிரியா, பாமக மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் மணி, ஊராட்சி மன்ற தலைவர் இராஜசேகர், ஒன்றிய தலைவர் விஜியகுமார், ஊராட்சி செயலாளர் ஜம்பேரி, ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருமாள், மாதப்பன், முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

முன்னாள் மாணவர்களின் தொடர் உரை கருத்தரங்கம்..!

Image
தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 'இயற்பியல் துறை சார்பில் கணினி - உதவி மருந்து வடிவமைப்பில் சமீபத்திய முன்னேற்றங்கள் இயற்பியலின் ஒருங்கிணைந்த பங்கு' என்ற தலைப்பில் முன்னாள் மாணவர்களின் தொடர் உரை கருத்தரங்கம் நடைப்பெற்றது.  இயற்பியல் துறை தலைவர் மற்றும் கருத்தரங்கு அமைப்பாளர்  செல்வபாண்டியன் கருத்தரங்கின் முக்கியத்துவம் மற்றும் மருத்துவ துறையில் இயற்பியலின் பங்கு குறித்து எடுத்து கூறி வரவேற்புரை நிகழ்த்தினார். சுருத்தரங்கின் சிறப்பு விருந்தினரும் மற்றும் இத்துறையின் முன்னாள் மாணவருமான ஜெகநாதன், உதவி பேராசிரியர்,  சவிதா பல்கலைக்கழகம், சென்னை, அவர்கள்  கணினி உதவி கொண்டு மருத்து வடிவமைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து பேசினார். இதில் ஆராய்ச்சி மைய இயக்குநர் (பொ) பேரா.   மோகனசுந்தரம் அவர்கள் தலைமை வகித்தார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பிரசாத் அவர்கள் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கௌரவ விரிவுரையாளர்கள் கோபலகிருஷ்ணன், செந்தில் மற்றும் இயற்பியல் துறை மாணாக்கர்கள் செ...

தமிழக வெற்றி கழகம் முதல் மாநில மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்..!

Image
 தருமபுரி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27ஆம் தேதி விழுபுரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் தபா சிவா தலைமையில் நடைபெற்றது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை குறித்து தமிழகம் மட்டுமல்ல உலக நாடுகளே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றது. தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்க மாநாடாக இது அமையும். இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் மகளிர் உள்ளிட்ட துணை அமைப்பினர் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும். இந்த மாநாட்டிற்கு வருகின்ற தொண்டர்கள் வாகனங்களில் வரும்...

சைபர் குற்றம், போதை பொருள் ஒழிப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு..!

Image
 திருத்துறைப்பூண்டி அருகே  கிராம மக்களுக்கு காவல்துறை சார்பில் சைபர் குற்றம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து  போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்படி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே களப்பால் காவல் காவல் துறை சார்பில்  மாரிநகரி கிராமத்தில்  காவல் ஆய்வாளர் சுப்ரமணியன், எஸ்ஐ தேவதாஸ், எஸ்பி ஏட்டு தாமோதரன் உள்ளிட்ட போலீசார் பொதுமக்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்தும்  இணையத்திலோ  செல்போனிலோ உங்களது சுய விபரங்களை அறிமுகம் இல்லாத நபர்களிடம் கொடுக்கக் கூடாது என்றும் இருசக்கர வாகன ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், கார் ஓட்டும்போது அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும்   மேலும் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மேலும் பண மோசடிகள் குறித்த தொடர்புக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாரிநகரி கிராம தலைவர் எழிலரசன்  செயலாளர் ...

ஓகேனக்கல் குடிநீர் வழங்காத பேரூராட்சியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..!

Image
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு  ஓகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக  மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சிவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு நகர தலைவர் கணேசன், மேற்கு ஒன்றிய தலைவர் சேட்டு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதேவி, கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சின்னவன், நகர பொருளாளர் முனியப்பன் ஆகியோர் முன்னலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேருராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கும் தற்போது பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடிநீர் வழங்கி வருவதாகவும், இதனால் தொற்று நோய்கள், எலும்பு தேய்மானம், பல் தேய்மானம் உள்ளிட்ட நோய்கள் உண்டாவதால், உடனடியாக ஓகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும் என கோரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளகள் டைகர் சிவா. ஜெய்கணேஷ், நந்தகிரி, நிர்வாகிகள் ராஜா, பச்சியப்பன், சரவணன், இராமரு, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்....

பொன் ஆண்டு விழாவை முன்னிட்டு நல திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா..!

Image
சென்னை ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற மனித நேயத்துடன் தினந்தோறும் அன்னதானம் செய்து வரும் ஃபாதர் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் நிறுவன தலைவர் மற்றும் ஒரே தேசம் (வார இதழ்) வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் பாலாஜி அவர்களின் பொன் ஆண்டு விழாவை முன்னிட்டு நல திட்ட  உதவி கள்  மற்றும் விருது வழங்கும் விழா ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  இவ்விழாவிற்கு முத்து பில்டர்ஸ் உரிமையாளர் மதுரை முத்துராஜ், ஆவடி RMKசூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கிருஷ்ணா மற்றும் போரூர் அய்யா குழு நிர்வாகி ஐயப்பன் அவர்கள் உதவியுடன் இவ்விழா நடைபெற்றது. சேவரத்னா உதவும் தேவதை செல்வாம்பிகை பாலாஜி தலைமையில் பொருளாளர் ராஜேஸ்வரி அவர்களின் ஏற்பாட்டில் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக  முர்த்தி தொழிலதிபர் பத்திரிக்கை சங்க தலைவர் குரு இளம் சமூக சேகர் ஷச்சின் மற்றும் சின்னத்திரை நடிகர் விக்கி ரோஷன் மற்றும் கோதண்டம் அவர்கள் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்  மற்றும் பொதுமக்களுக்கும் நல உதவி திட்டங்களும்  பல்வேறு உதவிகள் செய்...

ஸ்டாலின் அரசை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..!

Image
தருமபுரி மாவட்டம், கடத்தூர்  மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு மின் கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு, மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் விடியா  ஸ்டாலின் அரசை கண்டித்து இன்று மனித சங்கிலி போராட்டம் நகர செயலாளர்கள் தென்னரசு,சந்தோஷ்,ராஜா ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட சேர்மன் யசோதா மதிவாணன் ஆகியோர்  கலந்துகொண்டு திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கண்டன கோஷங்களை எழுப்பி  கண்டன பேரூறையாற்றினர். இதில்  ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், விஸ்வநாதன்,சேகர் பொம்மிடி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் சிஎம்ஆர் முருகன், அதிமுக நிர்வாகிகள் சரவணன், கென்னடி, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரியில் 6-வது புத்தகத் திருவிழா நேரலை..!

Image
  https://www.youtube.com/live/LX2iBYAwR0E?si=JZNFsqPDEqBcDsZJ

7 ஊர் பொதுமக்கள் கொண்டாடும் திரௌபதி அம்மன் திருவிழா..!

Image
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கூத்தப்பாடி குளத்தங்கரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம்  3-வது சனிக்கிழமை வருடா வருடம் நடைபெறும் திருவிழா வருகின்ற  04-10-2024முதல்12-10-2024 வரை நடைபெற உள்ளது.  நிகழ்ச்சி நிரல் வெள்ளிக்கிழமை 04-10-2024 மாலை 4 மணி கோவிலில் இருந்து சாமி சிலைகள் கூத்தப்பாடி  மண்டு  எடுத்து செல்லுதல்,சனிக்கிழமை 05-10-2024 கூத்தப்பாடி கிராமத்தில்  காலை 10 மணி அளவில் சாமி சிலைகள்ஊர்வலம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை குள்ளாத்திரம்பட்டி கிராமத்தில் 06-10-2024 காலை 8 மணியளவில் தீமிதி திருவிழா மற்றும் ஊர்வலம்  நடைபெறும். திங்கட்கிழமை 07-10-2024 பொச்சாரம்பட்டி  மற்றும் அளேபுரம் கிராமத்தில் ஊர்வலம் நடைபெறும். செவ்வாய்க்கிழமை 08-10-2024 அக்ரகாரம் கிராமத்தில் ஊர்வலம் நடைபெறும். புதன்கிழமை 09-10-2024 தன் தாய் கிராமமான மடம் கிராமத்தில் ஓய்வு வியாழக்கிழமை 10-10-2024 காலை 8 மணி அளவில் தீமிதி திருவிழா மற்றம் ஊர்வலம் நடைபெறும், மாலை 3 மணி அளவில் கீழூர் கிராமத்திற்கு சாமி சிலைகள் எடுத்து வருதல் மற்று...

என்னை செதுக்குபவர்கள் நூல் வெளியீட்டு விழா..!

Image
 தருமபுரி அடுத்த குண்டலபட்டியில் உள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் வசந்தகுமார் எழுதிய என்னை செதுக்குபவர்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பெருமாள் தலைமை தாங்கினார். விழாவில் வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரி செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். ஜார்கண்ட் மாநில உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம் முதன்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு என்னை செதுக்குபவர்கள் நூலை வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை வருவான் வடிவேலன் கல்லூரியின் நிறுவனர் வடிவேலன் பெற்றுக் கொண்டார். சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்தியத் தமிழ் சங்கத்தின் தலைவர் ஆவடி குமார் கலந்து கொண்டார். விழாவில் பேசிய நிதியரசர் கற்பக விநாயகம் மாணவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் தமது எதிர்கால குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக செதுக்கும் சிற்பியாக என்னை செதுக்குபவர்கள் நூல் இருக்கிறது என்று குறிப்பிட்டார். சிறந்த கல்வி அறிவுடன் ஒழுக்கமான மாணவர்களை உருவாக்குவதில் வருவான் வடிவேலன் கல்லூரி முன்னுதாரணம...