Posts

Showing posts from May, 2022

ஆவடி அருகே 6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான இரண்டாம் ஆண்டு கராத்தே போட்டி...!

Image
 ஆவடி அருகே ,6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான இரண்டாம் ஆண்டு கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த ஜெயா கல்லூரி விளையாட்டு திடலில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ் வழங்கினார் இப்போட்டியில் 6 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், செவ்வாபேட்டை, வெங்கம் பாக்கம் கசுவா மோரை, வேப்பம்பட்டு போன்ற பகுதிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தான் பயிற்சியாளர்கள் அளித்த பயிற்சியை வைத்து இப்போட்டியில் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.  போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் ரமேஷ் மற்றும் ராஜா மாணவ, மாணவிகள் பெற்றோர்களும் பயிற்சி ஆசிரியர்களும் கல்லூரி தாளாளர் கலந்து கொண்ட...

தருமபுரி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை..!

Image
 அடிக்கடி நண்பனை வீட்டுக்கு கூட்டி சென்றதால் கைக்குழந்தையுடன் பறிதவிப்பு! கள்ளக்காதல் ஜோடி தற்கொலை அடிக்கடி நண்பனை வீட்டிற்கு அழைத்துச் சென்றதால் நண்பனின் மனைவியுடன் அவருக்கு கள்ள உறவு ஏற்பட்டு இருக்கிறது. கடைசியில்  கணவனும் கைக்குழந்தையும் வேண்டாம் என்று  கள்ளக்காதலுடன் ஓடிப்போன பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  கள்ளக்காதலனும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தருமபுரியில்  இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   தருமபுரி மாவட்டத்தில் திட்டம் பட்டியில் வசித்து வந்தவர் சதீஷ். அதே பகுதியை சேர்ந்த சங்கீதா(19) என்பவரை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் செய்திருக்கிறார்.  இவருக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது.   சதீஷ் அவரது மனைவி சங்கீதா இருவரும் திருப்பூரில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்துள்ளனர். பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சின்னப்பையன்(20) என்பவரும் திருப்பூரில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார்.  அப்போது சின்ன பையனுக்கும் சதீஷ்க்கும்  பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் என...