Posts

Showing posts from August, 2024

தருமபுரியில் எச்ஐவி எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்..!

Image
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தருமபுரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அழகு, ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி இணைந்து  எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்து தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் சாந்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிராமிய கலைஞர்கள் நடன மூலமும், ஆட்டோக்களில் போஸ்டர் போட்டியும், அரசு வாகன மூலமும் விழிப்புணர் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இலக்கியம்பட்டி வரை எய்ட்ஸ் கட்டுப்பாடு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டும், கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.  ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தி கொண்டு விழிப்புணர்  பிரச்சாரம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், NHM ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)...

புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்..!

Image
தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையத்தில்  கோட்டை கருப்பன் கிடா விருந்து கடையில் இன்று புதிதாக பிரியாணி  கடை  திறக்கப்பட்டது. இந்த கடை திறப்பு விழாவையொட்டி,  இன்று ஒருநாள் மட்டும் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என விற்பனை செய்யப்பட்டது.  இதனை அறிந்த அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பிரியாணி வாங்குவதற்காக காலை முதலே குவிந்தனர். தொடர்ந்து கடை திறக்கப்பட்டு 12 மணி அளவில் பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது. இதில் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பதால் ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். இதனால்  புதிய பிரியாணி கடையில் மக்கள் கூட்டம் அலைமோதினர் . மேலும் பிரியாணி கடை திறப்பு விழாவை ஒட்டி சலுகை விலையில் இரண்டு பிரியாணி கொடுக்கப்பட்டதால், அதிக அளவில் மக்கள் மூன்று பிரியாணி நான்கு பிரியாணி என பார்சல் வாங்கிச் சென்றனர். இதனால் பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் மக்கள் கூட்டம் பரபரப்பாகவே காணப்பட்டது.

ரூபாய் 21 ஆயிரம் மதிப்பில் வர்ணம் பூசி தந்த முன்னாள் மாணவர்கள்..!

Image
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அருகே உள்ள எடையூர் அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் 280க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் அமரும் இருக்கைகள் மிகவும் பழுதடைந்து  துருப்பிடித்து இருந்தது இதை பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் இணைய வழியாக தெரிவித்தனர். இதனை அறிந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மூன்று பேர் பி டி ஏ பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு வர்ணம் பூசி தருவதாக ஒப்புக்கொண்டனர். சிங்கப்பூரில் பணியாற்றி வரும் எடையூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் அய்யப்பன்,இராமமூர்த்தி மகன் ராஜ்மோகன்,பன்னீர்செல்வம் மகன் முருகானந்தம் ஆகியோர் இணைந்து முன்னாள் எம்எல்ஏ, எம்பி ஆகியோரால் வழங்கப்பட்ட இருக்கை மற்றும் மேஜைகளுக்கு (60செட்) ரூபாய் 21 ஆயிரம் மதிப்பில் வர்ணம் பூசப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கைகளை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாக்யராஜ் ஆசிரியர் இந்திரா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பள்ளிக்கு உதவிய மூன்று முன்னாள் மாணவர்களையும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் , பொதுமக்கள், பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

தமிழக வெற்றிக் கழக கொடி மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஏற்றிய நிகழ்ச்சி..!

Image
தருமபுரி அடுத்து சோகத்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியேற்றும் விழா மாவட்ட கட்சி அலுவலகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. நடிகருமான  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 22 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள  தலைமை கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி அறிமுகப்படுத்தி  வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழக முழுவதும் மாவட்ட நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி கட்சி அலுவலகத்தில் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில்  தருமபுரி மாவட்டத்தில் சோகத்தூர் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்தில் தருமபுரி மாவட்ட தலைவர் தாபா சிவா தலைமையில் கொடியை ஏற்றி வைத்து  பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்      தருமபுரி,       பாப்பாரப்பட்டி,      பாலக்கோடு, காரிமங்கலம்,    பென்னாகரம்,  நல்லம்பள்ளி,     பாப்பிரெட்டிப்பட்டி,     அரூர், மொரப்பூர்,...

ஆவடியில் ஹரே கிருஷ்ணா திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை..!

Image
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த ஜே பி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள  ஸ்ரீ கிருஷ்ணா  திருக்கோவிலில் 22 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி திருவிழா ஹரே கிருஷ்ணா சேவா டிரஸ்டின் சார்பாக ஆலய நிர்வாகி சரவணன் ஷியாம் முராரி தாஸ் தலைமையில் நடைபெற்றது.  ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ கிருஷ்ண பல ராமர் மற்றும் ராதாகிருஷ்ணன் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர்  உறி அடித்தல் கிருஷ்ணர் பூமியில் அவதரித்தது போல் நாடகம் மற்றும் பஜனைகள் பக்தி பாடல் குழந்தைகள் பரதநாட்டியம் நடைபெற்றது. தொடர்ந்து  அனைத்து நடனமாடிய குழந்தைகளுக்கு பரிசுகளும் கேடையம் வழங்கி ஆலயம் சார்பாக கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாப்பாரப்பட்டி அருகே கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் கைது மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி அதிரடி..!

Image
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுக்கா பாப்பாரப்பட்டி அருகே கிட்டன அள்ளியில் கர்ப்பிணி வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதாக மாவட்ட ஆட்சியர் சாந்திக்கு  இரகசிய தகவல்  கிடைத்தது.     அவரது      உத்தரவின்               பேரில் இணை இயக்குநர் டாக்டர்.சாந்தி தலைமையில் மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்ளிட்ட குழுவிணர்  கிட்டன அள்ளி பகுதியில்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி வீட்டிற்க்கு  சந்தேகத்திற்க்குரிய வகையில் ஒரு பெண் செல்வதை கண்டவர்கள், சிறிது நேரம் காத்திருந்து திடிரென வீட்டிற்க்கு உள்ளே சென்று பார்த்த போது கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள பெண் குழந்தையை கரு கலைப்பு செய்வதற்காக கர்ப்பிணியின் பிறப்புறுப்பில் கருக்கலைப்பு மாத்திரை வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக மாத்திரையை அப்புறப்படுத்தி விசாரித்தில் கர்ப்பிணிக்கு 8 வருடத்திற்க்கு முன்னர்  திருமனமாகி  2 பெண் குழந்தை...

பா ம க நியமன மனு பெறுதல் ஆலோசனைக் கூட்டம்..!

Image
தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி சட்டமன்ற தொகுதியின் புதியதாக தொகுதி தலைவர், செயலாளர், மகளிரணி தலைவர், செயலாளர் பொறுப்புகளுக்கு நியமன மனு பெறுதல் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி ஒட்டப்பட்டியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது.  தருமபுரி மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் கூட்டத்தில் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவை மாநில தலைவர் வழக்கறிஞர் பாலு, சிறுபான்மைப் பிரிவு மாநில தலைவர் மொய்தீன், பசுமைத் தாயக மாநில துணை செயலாளர் பொன்மலை ஆகியோர் கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றி, புதிய பொறுப்பிற்கு விரும்பும் பொறுப்பாளர்களிடம் விருப்ப மனு பெற்றுக்கொண்டு, விருப்ப மனு அளித்தவர்களை தனித்தனியாக அழைத்து பேசினர். கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.பாரிமோகன், மாநில துணை தலைவர் பெ.சாந்தமூர்த்தி, மாநில செ...

78வது சுதந்திர தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை...!

Image
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ 78வது சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றிவைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  தொடர்ந்து பள்ளி  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் கண்கவரும் வகையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இந்நிகழ்வில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் , கூடுதல் ஆட்சியர் பிரியங்கா , மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து  சமாதான புறாவினை மாவட்டஆட்சியர், மாவட்டகாவல் கண்காணிப்பாளர் பறக்கவிட்டனர். நிகழ்ச்சியில் அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய 233 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.  மேலும் சுதந்திர தினத்தையொட்டி   தையல்இயந்திரம் , சலவைபெட்டி , வேளாண் பொருட்கள் , மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் என 55 பயனாளிகளுக்கு 24 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை  மாவட்டஆட்சியர் வழங்கினார். 78 வது சுதந்திரதின விழாவில் பள்ளி மாணவ , மாணவிகள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும்  கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு  மாணவ, மாணவிகளை பாராட்டினார். இதில்...

பொதுமக்களிடம் போதைப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது சத்தியம் வாங்கி பூச்செடி வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ, மாணவிகள்..!

Image
 தருமபுரி அடுத்து இலக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்  கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப் பொருளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் போதைப் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து  தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இடையே உள்ள பாரதிபுரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் போதையை ஒழிப்போம் நல்ல பாதையை வகுப்போம், புகையிலை நமக்கு பகையிலை, புகை பிடிக்காதே உன் வாழ்வின் புன்னகை இழக்காதே என பல்வேறு போதைப் பொருளுக்கு எதிரான துண்டு பிரச்சாரங்களுடன் சாலையில் நின்று கொண்டு பொதுமக்களிடம் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டுனர்களை நிறுத்தி அவர்களிடம் நீங்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனக்கூறி நாங்கள் உங்களுடைய மகள்களைப் போல எங்கள் மீது நீங்கள் போதைப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள் என கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து அவர்களுக்கு பூச்செடிகளை வழங்கினர்....

18 ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு மூலிகை ஆராய்ச்சி பயிற்சி அளிக்கும் கல்லூரி..!

Image
தருமபுரி இலக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் தற்போது மருத்துவத்துறையில் மூலிகை பயன்பாடுகள் அதிகரித்து வருவதால் இந்த மூலிகை ஆராய்ச்சிக்கு ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி முக்கியத்துவம் கொடுத்து மாணவ, மாணவிகளை சேலம் மாவட்டத்தில் இருக்கும் காரியாபட்டி பகுதியில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிறுவன மையத்திற்கு கடந்த 26 ஜூலை மாதம் அழைத்து சென்று நேற்று 9 ஆகஸ்ட் வரை மொத்தம் 14 நாட்களாக மூலிகை பயிற்சி அளிக்கப்பட்டது.  இதில் சுமார் 200 மாணவ, மாணவிகள் மூலிகை ஆராய்ச்சி குறித்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவம் சார்ந்த மூலிகை பயன்பாட்டுகளை அறிந்து கொண்டு பின்னர் அதன் செயல்முறை விளக்கம் குறித்து தருமபுரி அரச சித்த மருத்துவர் பாலசுப்பிரமணி, புனிதா தலைமையில் மாணவ, மாணவிகளிடம் செயல்முறை விளக்கம் கையேடுகளை குறித்து விரிவாக மாணவர்களிடம் கேட்டறிந்தார்கள். பின்னர் கல்லூரி பேராசிரியர்கள் மகேஸ்வரி, ரஞ்சிதா குமுதா, செல்வி, கல்லூரி துணை பேராசிரியர் சந்தியா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் செயல் முறை விளக்கம் கையேடுகளை அவர்களிடம் பார்வைக்கு அளிக்கப்பட்டது.  இதைத்தொட...

தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

Image
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட ஆலோசனை கூட்டம் தருமபுரி தனியார் திருமண மண்டபத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட  உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர்  பொப்பிடி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு உழவர் பேரியக்க தருமபுரி  கிழக்கு மாவட்ட செயலாளர் சின்னசாமி அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு உழவர் பேரியக்க தருமபுரி மேற்கு மாவட்ட தலைவர் ஐயப்பன், உழவர் பேரியக்க தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் ஆலயமணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி  உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.  இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டம் மிகவும் வறட்சியான மாவட்டம், தருமபுரி மாவட்டத்தில் விவசாய பாசன வசதி பெறும் அளவிற்கு எந்த நீர்த்தேக்கமும் இல்லை, பல ஆண்டுகளாக பருவ மழை பொய்த்த காரணத்...

அதிமுக ஆட்சியில் தான் அதிகமான கொலைகள் நடபதாக தமுமுக தலைவர் ஜவஹருல்லா பேட்டி ..!

Image
 அதிமுக ஆட்சியில்தான் அதிகமான கொலைகள் நடந்துள்ளது .தமுமுக தலைவர் ஜவஹருல்லா பேட்டி  தருமபுரியில் பிரபல பிரியாணி கடையில் நடந்த கொலை குறித்து இரங்கல் தெரிவிக்க தமுமுக தலைவர் ஜவஹருல்லா தருமபுரிக்கு வருகை புரிந்தார். இறந்து போன முகமது ஆசிப் குடும்பத்தார்க்கு இரங்கல் தெரிவித்து பின்னர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்கண்காணிப்பாளருக்கு தமுமுக  தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் கொலை குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனையும் உயிரிழந்து குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய்  நிவாரண தொகையும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என  மனுவில் தெரிவித்து பின்னர் அவர் பத்தரிக்கையாளர்களை சந்தித்த அவர் அப்பொழுது ஆசிப் என்ற இளைஞர் உணவகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது வெறிபிடித்த கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆசிப் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த பின்னணியில் தான் இந்த படுகொலை நடந்துள்ளது. இது ஒரு ஆணவ படுகொலை ஆகும் ஆசிப் சாதாரண குடும்பத்தை சார்ந்தவன் அந்தப் பெண்ணை சார்ந்த குடும்பம் செல்வம் செழிப்பான குடும்பம், சாதி மதத்தை தாண்டி இது ஒரு ஆணவ படுகொலை நடந்துள்ளது. படு...