விருதுநகர் மாவட்டம்; விருதுநகர் மாவட்ட அலுவலர் உத்தரவின்படி காரியாபட்டி தீ தடுப்பு குழு நிலைய அலுவலர் கு.குணசேகரன் தலைமையில் மூன்று சாலை சந்திப்பு, பாண்டியன் நகர், செவல்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த விபத்தில்லா தீபாவளி எப்படி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று தீயணைப்புத் மற்றும் மீட்பு பணி துறையினர் கு.குணசேகரன் அவர்கள் தலைமையில் விழிப்புணர் பிரச்சாரம் செய்து துண்டு பிரசுரங்களை வழங்கி வந்தனர். தீபாவளி பண்டிகை சமயம் பட்டாசு வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்; 1. குடிசை பகுதிகள், மின்டிரான்ஸ்பார்மர்கள், பெட்ரோல் பங்குகள் வைக்கோல் போர்கள் அருகில் பட்டாசு வெடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 2. மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மார்க்கெட் பகுதிகள், அரசு அலுவலங்கள், பஸ்நிலையம், ஊர்திகள் நிறுத்தும் இடங்கள் ஊர்தி செல்லும் சாலைகள், பொதுமக்கள் நடைபாதைகள், பொதுமக்கள் கூடுமிடங்களில் பட்டாசு வெடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 3.சிறுவர்கள் கையில் பட்டாச...