Posts

Showing posts from July, 2024

சர்வதேச சதுப்பு நிலம் பாதுகாப்பு தினம்..!

Image
 திருவாரூர் வனக்கோட்டம் முத்துப்பேட்டை வனச்சரகத்தில் ஜூலை 26 சர்வதேச சதுப்பு நிலம் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.  இதன் ஒரு பகுதியாக ஜாம்பவான்ஓடை புதிய படகு துறையில் கண்டல் மரக்கன்றுகள் ஓ எம் ஏ மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளுக்கு காடுகள் மற்றும் வனவிலங்குகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது மதியம் ஓ.எம்.ஏ பள்ளியில் அலையாத்தி காடுகளின் முக்கியத்துவம் குறித்து மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்யப்பட்டது.  இதில் மாவட்ட வன அலுவலர் எல்.சி.எஸ் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார் இந்நிகழ்வில் ஓ.எம்.ஏ பள்ளி தாளாளர் ஓ.எம்.எ பள்ளி நிறுவனர் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜவேலன் வீரன் கோயில் வனக்குழு தலைவர் சங்கர் ஓம்கார் பவுண்டேஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ஒலிவியா ஆகியோர் கலந்துகொண்டு அலையாத்தி காடுகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.  நிகழ்ச்சியின் நிறைவில் முத்துப்பேட்டை வன சரக அலுவலர்...

தருமபுரியில் அரேபியா நாட்டின் மரம் கொத்து கொத்தாக காய்த்து கட்டு கட்டாக பணம் தரும் மரம்..!

Image
தருமபுரி அருகே 34 வகையான பேரிச்சை மரங்களை வளர்த்து வரும்  விவசாயி ஒருவர் தற்போது இந்த பேரிச்சை பழம் அறுவடை தொடங்கியது, ஒரு கிலோ 150 முதல் 600 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவில் வராததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்து கொண்டு இருந்த நிலையில் அரிய குலத்தை சேர்ந்த நிஜாமுதீன் என்ற விவசாயி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரேபிய நாட்டில் இருந்து பேரிச்சை நாற்றுக்களை வாங்கி வந்து இங்கு விதைத்து பார்த்துள்ளார் இந்த பேரிச்சை நாற்றுகள் நல்ல வளர்ந்து மரங்களாக ஆகி  பழங்கள் கொத்து கொத்தாக பழுத்து தொங்கியது. இதை பார்த்து விவசாயி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த பேரிச்சை பழம் அறுவடை செய்து உள்ளூர் மற்றும் வெளியூர்க்கு ஏற்றுமதி செய்கிறார். இது போன்று ஆண்டுக்கு ஒரு முறை சாகுபடி செய்து விற்பனை செய்து வரும் நிஜாமுதீன் கூறியதாவது; அரேபியா  நாட்டில் வேலை செய்த போது விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதனால் பேரிச்சை நர்சரி பண்ணைக்கு சென்று அங்கு பேரிச்சை சாகுபடி வளர்க்கும் முறைகள் குறித்து பயிற்சி எடுத்துக் கொண்ட...

திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!

Image
 தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு  தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்வு, நியாய விலை கடைகளில் பருப்பு, பாமாயில் எண்ணெய் நிறுத்திய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் இளங்கோவன் தலைமையேற்று கண்டன உரையாற்றினார். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் வரவேற்புரை ஆற்றினார். மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் சங்கர் முன்னிலை வகித்தார். கேப்டன் மன்ற துணைச் செயலாளர் புல்லட் மாரிமுத்து, தொழிற்சங்க துணைத்தலைவர் விஜய் வெங்கடேஷ், வர்த்தக அணி செயலாளர் குமார், மாவட்ட வைத்திய தலைவர் தங்கவேல், உதயகுமார், மாவட்ட பொருளாளர்கள் சீனிவாசன், ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!

Image
 தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி சட்டமன்ற அலுவலகத்தில் மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி. வெங்கடேஷ்வரன் கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். பின்னர் இக்கூட்டத்தின் தீர்மானங்கள் வெளியிட்டனர். வருகின்ற ஜுலை.25 பசுமைத் தாயகம் தினத்தை முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்ட பசுமைத் தாயகத்தின் சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் மரக்கன்று நடுதல், கட்சி கொடியேற்றுதல், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டும் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் விரைந்து செயல்படுத்த தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கி விரைந்து தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.  காவிரி ஆறு தருமபுரி மாவட்டத்தின் வழியாக தான் முதலில் நுழைகிறது. இம்மாவட்டம் வானம் பார்த்த பூமியாக காட்சி...

பாலக்கோடு அருகே 3 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்..!

Image
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தருமபுரி மாவட்டத்தில் கடந்த 11-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, எந்தெந்த பகுதிகள் மிகவும் பின்தங்கிய மற்றும் மலைவாழ் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளை தேர்வு செய்து அத்தகைய பகுதிகளில் அரசின் அனைத்து துறையினுடைய அலுவலர்களையும் அழைத்துச் சென்று, அரசு திட்டங்களை எடுத்துரைத்து, அங்குள்ள பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய  வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார். இதைதொடர்ந்து  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பேளாரஅள்ளி, எர்ரனஅள்ளி, கரகதஹள்ளி  ஆகிய பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் எர்ரனஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் பேளாரஅள்ளி தலைவர் ராதாமாரியப்பன், எர்ரனஹள்ளி தலைவர் வளர்மதி சின்னவன், கரகதஹள்ளி பஞ்சாயத்து தலைவர் ராஜிமுத்துவேல் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து பேசினார்கள். இந்த முகாமில் கலைஞரின் வீடு வசதி திட்டம், முதியோர் உதவித்தொகை,வீட்டுமனை பட்டா, ஜாதி சான்றிதழ் உட்பட 12 அரசு துறைகள்...

பல்வேறு கட்டணங்களை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து அமமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

Image
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.  ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டால் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி பல மடங்கு உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்வு, முத்திரைத்தாள், மறைமுக பேருந்து கட்டணம், சாலை வரி உயர்வு என பல்வேறு  கட்டணங்களை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழகச் செயலாளர் டி.கே ராஜேந்திரன், கழக அமைப்புச் செயலாளர் முருகன், பாலு, ஏகநாதன், மணிமேகலன், கௌதமி, சங்கீதா மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அருங்காட்சியகத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு..!

Image
 தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், வள்ளல் அதியமான் கோட்டத்தின் முன்புறத்தில் உள்ள இடத்தில் தொல்லியல் துறையின் மூலம் நடுகற்கள் அகழ்வைப்பகம் அமைப்பதற்கு அரசு ஆணை வரப்பெற்றுள்ளதை தொடர்ந்து, தருமபுரி நகரப்பகுதியில் உள்ள அருங்காட்சியகத்தை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை 2022-2023-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பொதுமக்கள், குறிப்பாக மாணவர்களிடையே தமிழ் தொல்லியல் மரபு குறித்து ஆர்வத்தை ஏற்படுத்திடவும், நமது மாநிலத்தில் கிடைத்துள்ள அரும்பொருட்களைப் பேணிப் பாதுகாக்கவும், அருங்காட்சியகங்களும், அகழ்வைப்பகங்களும் (on-site museums) மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், தருமபுரியில் அகழ்வைப்பகம் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் பொது மக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் வந்து செல்லத்தக்க வகையில் நிலத்தினை ஒதுக்கீடு செய்து தருமாறு தொல்லியல் துறையின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அவர்களை கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் குழு உறுப்பினர்கள் ஆய்வின் போது, குழு மற்றும் தருமபுரி மாவட...

பால் கொள்முதலுக்கான விவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!

Image
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், 2-வது நாளாக பாலக்கோடு வட்டம்,  புலிகரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் பணிகள், பால் கொள்முதலுக்கான பணம் பட்டுவாடா செய்த விவரங்கள், போனஸ் வழங்கிய விவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆவின் பொது மேலாளர் மாலதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், ரேணுகா, துணை பதிவாளர் (பால்வளம்) நடராஜ்மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம்..!

Image
 தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இந்திய மூல நிவாசி  காவல் படையினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழமுதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் தலித் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் தாயக மக்கள் கட்சி மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில இளைஞர் அணி செயலாளர் பருதிவளவன், மாவட்டத் தலைவர் பிரசாந்த், மாவட்ட செயலாளர் திருமாவளவன், வழக்கறிஞர்கள் குறிஞ்சி வேந்தன், அம்பேத்கர், சந்திரசேகர், பழ முனுசாமி மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒகேனக்கல்லில் 4வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

Image
கர்நாடகா அணைகளில் இருந்து 63ஆயிரத்து 882 கன அடி உபரி நீர் திறப்பால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 45;ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை  கிருஷ்ணராஜ சாகர் அணை  நுகு அணை மூன்று அணைகளில் இருந்தும் மொத்தமாக 63ஆயிரத்து 882 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை நான்கு மணி அளவில் வினாடிக்கு 21,000  கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கூடுதலாக உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் மெயின் அருவி ,ஐந்தருவி சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.மேலும் காவி...

எழுத்தறிவு எண்ணறிவு மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி..!

Image
தருமபுரி மாவட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டத்தின் சார்பில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு எண்ணறிவு மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்க ஏதுவாக புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கடந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டு  சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போது 2024-25 ஆம் கல்வி ஆண்டில் தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட குடியிருப்புகளில் முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத 2100 பேர் கண்டறியப்பட்டு 101 தொடக்க நடுநிலைப் பள்ளிகளில்  உள்ள  புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தின் மூலம் (2024 ஜூலை.15) முதல் ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேரம் என வரும்  நவம்பர் 2024 மாதம் வரை மொத்தம் 200 மணி நேரம்  அடிப்படை எழுத்தறிவு என்ன அறிவு மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் தன்னார்வலர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து  தருமபுரி  ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்...

காமராஜர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை..!

Image
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு  கர்ம வீரர் காமராஜர் 122 வது பிறந்த நாள் விழா பாஜக நகர தலைவர் ஆர்.கே. கணேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சர்க்கரை ஆலை முன்பு உள்ள காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் டைகர் சிவா, நகர இளைஞர் அணி தலைவர் ஜயப்பன், நிர்வாகிகள் சுரேஷ், கண்ணன் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

தருமபுரியில் உணவு பாதுகாப்பு துறை இரண்டு கடைகளுக்கு சீல்..!

Image
தருமபுரி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிருஷ்ணாபுரம், எட்டி மரத்துப்பட்டி ஆகிய பகுதியில் இருக்கும் பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்ட போது இரண்டு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரிய வந்தது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் குமணன் ஒரு கடைக்கு ரூ.25,000 என இரண்டு கடைகளுக்கும் ரூ.50,000 அபராதம் விதித்து கடைகளுக்கு சீல் வைத்தார். மேலும் அப்பகுதியில் உள்ள  கடைகளுக்கு குட்கா, புகையிலை பொருட்கள் விற்கக் கூடாது என அறிவுறுத்தினார்.

புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா..!

Image
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வடக்கு வீதியில் அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி இயங்கி வந்தது. பின்னர் 1980 ஆண்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியாக இயங்கிவருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாமல் ஆஸ்பட்டாஸ்சீட்டு அமைக்கப்பட்டு அதில் இயங்கிவந்தது. இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சத்தில் இரண்டு வகுப்பரை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா கடந்த மே 9ம் தேதி நடைபெற்றது.  புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் எம்எல்ஏ மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், வட்டார கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், அறிவழகன், நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, ஒன்றிய ஆணையர் கமல ராஜன், பொறியாளர் சூரியமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் எழிலரசன், தலைமையாசிரியர் வேதரெத்தினம் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

சாலை விபத்தில் மரணமடைந்த ஊர்க்காவல் படை நபர் குடும்பத்தினருக்கு விபத்து காப்பீடு..!

Image
 தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் கடந்த 2019 -ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் த/பெ. நடராஜன் (ஊர்க் காவல் படை எண் 203) என்பவர் 26.01.2024 அன்று நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து  தருமபுரியிலுள்ள ஏ.ஜெட்டிஹள்ளி கனரா வங்கிக் கிளையில் இவரது ஊதிய வங்கிக் கணக்கு இருந்தமையால் அவ்வங்கியின் "payroll" விதிகளின்படி ஒருங்கிணைந்த விபத்துக் காப்பீட்டு நிதியாக ரூ.17,00,000/-ற்கான வங்கி வைப்புத் தொகைக்கான பத்திரங்களை கனரா வங்கியின் கோட்ட மேலாளர் வினிஷ்பாபு வழங்க, அவரிடமிருந்து பெற்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் 12.07.2024 அன்று மரணமடைந்த ஊர்க்காவல் படை வீரர் சுரேஷ் அவர்களின் மனைவி அஷ்வினி, மகள் அர்னித்தா, மகன் தர்ஷன் ஆகியோர் பெயரில் நேரில் வரவழைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  தருமபுரி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் ஊர்க்காவல் படை வட்டார தளபதி தண்டபாணி ஆகியோர் உடனிருந்தனர்.

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் பாராட்டு சான்றிதழ்..!

Image
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் நர்ஸிங் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் வழங்கி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில்  மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என இது போன்று பல்வேறு வாசகங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பதாகைகள் ஏந்தி கொண்டு விழிப்புணர்வு பேரணியாக சென்று இலக்கியம்பட்டியில் நிறைவடைந்தது. இதில் அரசு தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) வேடியப்பன், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட குடும்பநல துணை இயக்குநர் பாரதி, துணை இயக்குநர் பாலசுப்ரமணியம், தொழுநோய் துணை இயக்குநர் புவனேஸ்வரி, மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் உமா, எய்ட்ஸ் மற்றும் கட்டுபாட்டு அலுவலகம் மா...

கௌரவ பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம்..!

Image
 தருமபுரி அரசு கலைக் கல்லூரி முன்பு கௌரவ பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் யுஜிசி நிர்ணயித்த ரூ.50 ஆயிரத்தையும், நிலுவைத் தொகையான 15 லட்சத்தையும் வழங்கிட வேண்டும்,  ஊதிய உயர்வு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நான்கு   மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை முன் வைத்து  தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் செய்தனர். இதில் அரசு கலைக் கல்லூரி 128 பேராசிரியர் கலந்து கொண்டனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 123 பயனாளிகளுக்கு ரூ.34 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்..!

Image
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள்  குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு , மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:     தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து , விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி , குடிநீர் வசதி , பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும் , பட்டா வேண்டுதல் , சிட்டா பெயர் மாற்றம் , புதிய குடும்ப அட்டை வேண்டுதல் , வாரிசு சான்றிதழ் , வேலைவாய்ப்பு , இலவச வீட்டுமனை பட்டா , முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள் , உதவி      உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 603 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்...

ஆதித்தமிழர் பேரவையினர் நீட் தேர்வு, சாதி வாரி கணக்கெடுப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

Image
 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய ஒன்றியம் முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும், கோவிலாங்குளம் அழகேந்திரன் ஆவண படுகொலை கண்டித்தும் ஆதித்தமிழர் பேரவையான தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கு மற்றும்  அவர் குடும்பத்தார் மீதும் போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், தாக்கப்பட்டவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் எஸ்சி. எஸ்டி வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் மாநிலத் துணை பொதுச் செயலாளர் விடுதலை செல்வன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி, கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் சரவண குமார் மற்றும் மாநில, மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ..!

Image
தருமபுரி மாவட்டம்,பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முக்கல் நாயக்கன்பட்டி ஊராட்சி, கீழ் ராஜா தோப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டிடத்தை பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து  பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி, செயற்பொறியாளர் சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பினர் சம்பத், கோபால், துணைத் தலைவர்  ஜெகநாதன் மற்றும் கட்டிட ஒப்பந்தர் சசிகுமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இலக்கியம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் அலைமோதும் பொதுமக்களின் கூட்டம்..!

Image
தருமபுரி அடுத்து இலக்கியம்பட்டி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைந்துள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடை இன்று திறக்கப்பட்டது.  இந்த பிரியாணி கடையை தருமபுரி கிளை உரிமையாளர் சாஜித் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, புரட்சித்தலைவி அம்மா பேரவை தருமபுரி மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் கலந்து கொண்டனர். இந்த தொப்பி வாப்பா பிரியாணி கடை சனிக்கிழமை திறப்பு நாளான இன்று நாளையும் பிரியாணிகளை சலுகையில் சிக்கன் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், மட்டன் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என சிறப்பு சலுகையுடன் வழங்கி வருகின்றனர்.  இதனால் தருமபுரி சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பிரியாணி பிரியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என கூட்டம்  கூட்டமாக வந்து நீண்ட வரிசையில் சில மணி நேரங்களாக காத்திருந்தும், அலை மோதி கொண்டும் உற்சாகத்துடன் கை பிடிக்க முடியாத அளவிற்கு பிரியாணியை வாங்கி சென்று வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அமைச்சர் ஆய்வு..!

Image
 தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.7.2024 அன்று மக்களுடன் முதல்வர் திட்டம் ஊரக பகுதிகளில் துவக்கி வைத்தல் தொடர்பாக முன்னேற்பாடு பணிகளை குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆய்வு செய்தார்.  ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெரும் துறைகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகள், மேடை அமைய உள்ள இடத்தினையும்  பயனாளிகளை அழைத்து வரும் வாகனங்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள், பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள்  குறித்தும் அமைச்சர் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.  அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில்  3 முறை வருகை புரிந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தருமபுரி மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார் குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் மற்றும் வத்தல்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்..!

Image
 தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்  முகாம் நடைபெற்றது.  இந்த முகாமில் மொத்தம் 100 மனுக்கள் பெறப்பட்டு  அதில் 99 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மேலும் புதிதாக 42 மனுக்கள் பெறப்பட்டது. இந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமினை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் அவர்கள் தலைமை நடைபெற்றது. இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய மூல நிவாசி காவல் படையினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

Image
 தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இந்திய மூல நிவாசி காவல் படையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழமுதன் தலைமை தாங்கினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடிக்கு ஆதரவு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதி வெறி மற்றும் கூலிப்படை கும்பல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும், சாதி ஆவண படுகொலையை தடுத்து தனி சட்டம் இயற்றிட வேண்டும், கள்ள சாராயம், கஞ்சா, சந்து கடை, மது வியாபாரம் ஆகியவற்றை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இதில் மண்டல செயலாளர் தீனா, மாவட்டத் தலைவர் பிரசாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குமார், மேற்கு மாவட்ட செயலாளர் திருமாவளவன், நாகேந்திரன், பழ முனுசாமி மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.