Posts

Showing posts from November, 2024

மாவட்ட ஆட்சியர் சான்றிதழ், 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை..!

Image
 தமிழக அரசின் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாணவர்கள் கண்டுபிடிப்பாளர்கள் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பென்னாகரம், இளநிலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளின் சிறப்புகளை எடுத்துரைத்து, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஒரே அரசு கலைக்கல்லூரி என்ற பெருமையினைப் பெற்றுத் தந்துள்ளனர். கல்லூரிக்கு பெருமை சேர்த்திட்ட மாணவர்களை மாவட்ட ஆட்சியர் சாந்தி சான்றிதழ் மற்றும் 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் முனைவர் ஜா.பாக்கியமணி, முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பென்னாகரம், முனைவர் கோ.வெங்கடாசலம் உதவி பேராசிரியர், வணிகவியல் துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியோர் உடன் இருந்தனர்.

தருமபுரியில் கிராம சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

Image
 கிராம சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராஜேஸ்வரி, மாதம்மாள் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக 3000க்கும் மேற்பட்ட காலியாக உள்ள துணை சுகாதார நிலையங்களை பயிற்சி முடித்து பணிக்காக காத்திருப்பவர்களை கொண்டு எவ்வித நிபந்தனை இன்றியும் உடனடியாக நிரப்ப வேண்டும், கூடுதல் துணை மையப் பொறுப்பு பணிகளை பார்ப்பதற்கு நிர்பந்தம் கொடுப்பதை கைவிட வேண்டும், கிராம சுகாதார செவிலியர் நிலையில் இருந்து பகுதி சுகாதார செவிலியர் நிலைக்கு பதவி உயர்வில் செல்லும் சகோதரிகளை மீண்டும் துணை மைய பொறுப்பு பணிகளுக்கு உள்ளாக்குவதை தவிர்க்க வேண்டும், பகுதி சுகாதார செவிலியர்களுக்கு துணை மைய கூடுதல் பொறுப்புகள் வழங்குவதை கைவிட வேண்டும், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான அறிக்கைகள் காணொளி கூட்டங்களை முறைப்படுத்திட வேண்டும், பணி சுமை மன அழுத்தம் கொடுப்பதை கைவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலிய...

ஆன்லைன் மூலம் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் கைது..!

Image
காரிமங்கலத்தில் கோடிக்கணக்கில் பணம் வைத்து ஆன்லைன் மூலம் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்-செல்போனை ரகசியமாக கண்காணித்து கைது செய்த குற்றப்பிரிவு காவல் துறையினர்..!  தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் ஆன்லைன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒருவரை தனிப்படை போலீஸார் கண்காணித்து கைது செய்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து ,எந்த விளையாட்டு வீரர் இந்த அணியில் இடம் பெறுவார் என்றும் ? ஒவ்வொருவரும் எத்தனை ரன் சேர்ப்பார்கள்? விக்கெட் விழுமா? யார் வெற்றி பெறுவார்கள்? இப்படி பல்வேறு அம்சங்களை அடிப்படையாக வைத்து சூதாட்டம் நடைபெறுவதை தருமபுரி சைபர்  குற்றபிரிவு காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் ஆன்லைன் ஐபிஎல் கிரிக்கெட் கேம்லிங்  நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதையடுத்து, தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதையடுத்து  காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (31) என்ற இளைஞரின் தொலைபேசியை கண்காணித்து ஆய்வு செய்ததில் ஆன்லைன் மூலம...

அவசரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..!

Image
 அவசரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..! தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம்  வட்டுவன ஊராட்சி, அலகட்டு மலை கிராமத்தில் ருத்ரப்பா, சிவலிங்கி தம்பதியினருக்கு பிறந்த கஸ்தூரி எனும் 13 வயது சிறுமி வீட்டின் அருகே கீரை பறிக்கும் பொழுது சிறுமியை பாம்பு கடித்ததால் சிறுமி சத்தமிட்டுள்ளார் அப்பொழுது அங்கு உள்ள கிராம மக்கள் சிறுமியிடம் கேட்டபோது பாம்பு கடித்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர வழியில்லாத காரணத்தால் அப்பகுதி கிராம மக்கள் சிறுமியை தொட்டில் கட்டி சுமார் 8 கிலோமீட்டர் அளவில் மலைக்காடு வழியாக தார் சாலையில் உள்ள ஆட்டோவிற்கு நடைபயணமாக தூக்கி சென்றனர். பாலக்கோடு அருகே சீங்காடு என்ற பகுதியை அடைந்து அங்கு தயார் நிலையில் இருந்த ஆட்டோவில் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்றும் பொழுது அவர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இதனால் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மலை கிராமத்திற்கு ஆரம்ப சு...

போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் நலச்சங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா..!

Image
தருமபுரி மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம், 2025 ஆம் ஆண்டுக்கான டைரி, காலண்டர் மற்றும் அடையாள அட்டை  மற்றும் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தருமபுரி ரோட்டரி அரங்கில் நடைபெற்றது.  இவ்விழாவுக்கு சங்க தலைவர் ஜி.சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் எம்.கன்னியப்பன், மாவட்ட பொருளாளர் வேடியப்பன் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்தனர். மாவட்டத் துணைத் தலைவர்கள் எஸ். கிருஷ்ணன், ஏ. சுப்பிரமணி, மாவட்ட இணை செயலாளர்கள் பிரபு குமார், சிவசண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.சிவகுமார், மாநில அமைப்பாளர் எஸ்.சரவணன், மாநிலத் துணைத் தலைவர் ஜி.அசோக், மாநில இணை செயலாளர். எஸ்.எம். மூர்த்தி, மண்டல செயலாளர் எஸ்.ஜெகநாதன் ஆகியோர் சிறப்பு உழைப்பாளர்களாக கலந்து கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு டைரி, கலண்டர் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினர். தொடர்ந்து 10,  12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ...

பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியல்..!

Image
பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள மருக்காரம்பட்டி, பவளந்தூர், ஜெல் மாரம்பட்டி, அட்ட பள்ளம், உப்பலாபுரம் ஆகிய கிராமங்கள் மலை சார்ந்த பகுதி ஆகும். இந்த கிராமங்களில் இருந்து 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.மேலும் அப்பகுதி சார்ந்த மக்களும் அன்றாட தேவைகளுக்கும், வேலைகளுக்கு செல்லவும் பஸ் போக்குவரத்தை நம்பி உள்ளனர். ஆனால் தினமும் காலை 8. 15 மணிக்கு செல்லும் பேருந்து 9:30 மணிக்குத்தான் பி.அக்ராகரம் பள்ளியை வந்து அடைகிறது. இதனால் மாணவர்கள் குறித்த நேரத்தில் வகுப்புக்கு செல்ல முடிவதில்லை என்று கூறுகின்றனர். மேலும் மாலை 6:30 மணிக்கு பி.அக்ராகரத்தில் இருந்து செல்லும் 26 சி பேருந்து இரவு  8 மணிக்கு மேல் தான் அவர்கள் இறங்கும் பகுதிகளுக்கு சென்று சேர்கிறது. பஸ்ஸிலிருந்து இறங்கும் மாணவர்கள் அங்கிருந்து அவர்கள் வீட்டிற்கு செல்ல  ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள்  கூடுதல் பஸ் வசதி கேட்டு திடீர...

தருமபுரி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழப்பு..!

Image
 தருமபுரி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழப்பு. உறவினர்கள் மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே பழையபுதுரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் பார்வதி தம்பதியினரின் இவர்களது மகன் கோகுல கண்ணன் (27) . இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அஷ்தகிரியூர் பகுதியைச் சேர்ந்த அம்சவேல் நாகமணி தம்பதியினரின் மகள் சந்தியா(24) என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில் சந்தியா, மீண்டும் கர்ப்பமாகி தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான பிரபல தனியார் மருத்துவமனையில் (விஜயா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை) கருவுற்ற நிலையில் ஆரம்பத்திலிருந்து முறையான மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளனர்.      இந்த நிலையில் நேற்று இரவு சந்தியாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது உடனடியாக மருத்துவமனைக்கு போன் செய்து மருத்துவர் இருக்கிறாரா என கோகுல கண்ணன் விசாரித்துள்ளார் அப்பொழுது மருத்துவமனையில் மருத்துவர...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே அடையாளம் தெரியாத ஆண் பிணம் ..!

Image
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே  அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று இருந்துள்ளது. அவ்வழியாக மாலை 5 மணி அளவில் நடைபயிற்சிக்கு  சென்ற நபர்கள் அவர் இறந்து கிடந்தது பார்த்தவுடன் தருமபுரி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவல் அறிந்து  சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர்  இறந்து கிடந்தவர் யார் என்று  விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.  இறந்து கிடந்த நபர் பாக்கெட்டில் அவருடைய தகவல் ஏதாவது உள்ளதா என காவல்துறையினர் தேடி பார்த்தனர் ஆனால்  அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காததால், உயிரிழந்த நபரை காவல்துறையினர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து  இறந்த கிடந்தவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக   எடுத்துச் சென்றனர்.  இது குறித்து தருமபுரி நகர காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி குளோபல் மருத்துவமனையில் பெங்களூரு அப்பலோ மருத்துவமனையின் உயர் சிகிச்சை..!

Image
தருமபுரி குளோபல் மருத்துவமனையில் பெங்களூரு அப்பலோ மருத்துவமனையின் அனைத்துவிதமான உயர் சிகிச்சைகளும் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தருமபுரி அரசு கலைக்கல்லூரி எதிரே குளோபல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையும் பெங்களூருவில் உள்ள அப்பலோ மருத்துவமனையும் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் அப்பலோ மருத்துவமனையில் அனைத்து விதமான சூப்பர்ஸ்பெஷாலிட்டி சிகிச்சைகளும் இங்கு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தருமபுரியில் நடந்த நிகழ்ச்சியில் பெங்களூரு அப்பலோ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் டாக்டர் கௌதம் ராமன் பேட்டியில் கூறியதாவது: தருமபுரியில் குளோபல் மருத்துவமனை சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது. சில நோய்களுக்கு உயர் சிசிச்சை பெற நோயாளிகள் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்லும் போது நேரம் அதிகமாக செலவிட வேண்டியுள்ளது. நோயாளியின்தொடர் சிகிச்சைக்கும் அதிக நேரமும், பொருட்செலவும் ஆகிறது. இதை குறைக்கும் வகையில் பெங்களுரு அப்பலோ மருத்துவமனையும், தருமபுரி குளோபல் மருத்துவமனையும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் அடிப்படையில் அனைத்து விதமான நோய்களு...

விவசாயிகள் தண்ணீர் உரிமை கோரிக்கை மாநாடு..!

Image
தருமபுரி மாவட்ட விவசாயிகள் தண்ணீர் உரிமை கோரிக்கை மாநாடு தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் சின்ன சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள்  சக்திவேல், குப்புசாமி, பொருளாளர் பழனி, மாவட்ட துணைத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் முனி ராஜ்,  இளைஞரணி தலை வர் வெங்கடேசன், துணைத் செயலாளர் சுப்பிர மணி, பட்டு பிரிவு செயலாளர் ராஜா, துணை செயலாளர்  நடராஜ்,  சட்ட ஆலோசகர் ராமசாமி, கரும்பு பிரிவு தலைவர் லோகநாதன்,  செயலாளர் குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுசெயலாளர் சுந்தரம்,  பொருளாளர் பாண்டியன், துணை தலைவர் ஆறுமுகம், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ஸ்ரீராம்ரெட்டி,  செயலாளர் சென்னைய நாயுடு, பொருளாளர் சண்முகம், மாநில செயலா ளர் சின்னசாமி, துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தருமபுரி மாவட்டம் தொடர் வறட்சி யால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பிழைப்பு தேடி அண்டை மாவட்டங்கள், அண்டை மாநிலங்களுக்கு செல்லும் அவலநிலை நீடிக்கின்றது. இந்த மாவட்டத்தை ஒட்டி ஓடும் காவிரியும், தென்பெண்ணை ஆ...