Posts

Showing posts from January, 2025

தவெக மாவட்ட செயலாளர் தாபா சிவாக்கு பிரமாண்டமான வரவேற்பு..!

Image
 தமிழக வெற்றிக் கழகத்தின் தருமபுரி மாவட்ட செயலாளராக தாபா சிவா பொறுப்பேற்று தனது சொந்த ஊர் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார் அப்பொழுது கட்சி தொண்டர்கள் தொப்பூர் சுங்க சாவடி பகுதியில் கட்சி நிர்வாகிகள் அவருக்கு மலர்கள் தூவி, பட்டாசுகள் வெடித்து பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளித்தனர்.  அதைத்தொடர்ந்து தருமபுரி நகரப் பகுதியில் உள்ள இலக்கியம்பட்டி ஸ்ரீ சாலை மாரியம்மன் கோவிலில்  தாபா சிவா பெயரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் தொண்டர்களுக்கு  இனிப்புகள் வழங்கப்பட்டது.  தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் சாலை மார்க்கமாக கட்சி அலுவலகத்திற்கு சென்றபோது மாவட்ட கட்சி அலுவலகம்   முன்பு காத்திருந்த கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மாவட்ட கழக செயலாளரை பட்டாசுகள் வெடித்து, ஆரத்தி எடுத்து மேளதாளங்களுடன் மலர்களைத் தூவி  பிரம்மாண்டமான முறையில் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர்.  இதில் மாவட்டக் கழக இணைச் செயலாளர்  வீரமணி, பொருள...

தருமபுரியில் புத்தாக்க மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் ..!

Image
தருமபுரியில் புத்தாக்க மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் ..! தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில், மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா மேற்பார்வையில், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இணைந்து நடத்தும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 3.0 சார்பில் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவம் உருவாக்கும் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட மேலாளர் கௌதம் சண்முகம் தலைமை தாங்கி அறிவியல் கண்டுபிடிப்புகளில் புலிக்கரை, இலக்கியம்பட்டி, பேகர அள்ளி, மல்லுப்பட்டி போன்ற 13 அரசு மேல்நிலைப்பள்ளி சேர்ந்த 80 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட கல்வி அலுவலகம், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலு, நடுவர்கள் டாக்டர் ஹேமா, டாக்டர் மாலதி, கபில்தேவ், வேலுச்சாமி, ஸ்டார்ட் அப் கம்பெனி ஹரிஹரசுதன், சவிதா, கோபிநாத், ஆகியோர் கலந்து  கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தருமபுரியில் புத்தாக்க வடிவம் உருவாக்கும் போட்டி..!

Image
புத்தாக்க வடிவம் உருவாக்கும் போட்டி..! தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆணையின்படி தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளி கல்வித்துறை தமிழ்நாடு   இணைந்து நடத்தும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் சார்பில் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவம் உருவாக்கும் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட மேலாளர் கௌதம் சண்முகம் தலைமை தாங்கி அறிவியல் கண்டுபிடிப்புகளில் தேர்வான 17 குழு அணிகளை சேர்ந்த 80 மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் வழிகாட்டியாளர்களாக கபில்தேவ், வேலுச்சாமி, ஹரிஹரசுதன், நாமக்கல் செல்வம் பொரியல் கல்லூரி சேர்ந்த பேராசிரியர் முனைவர் சந்தோஷ், சவிதா, கோபிநாத், வினிதா, ஆகியோர் கலந்து  கொண்டு பள்ளி மாணவர்களை ஊக்கவித்து பேசினார்கள்.

தருமபுரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு..!

Image
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு..! தருமபுரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு அரூர் கச்சேரிமேட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு தியாகிகள் நடராசன் தாளமுத்து உறுவ படத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல செயலாளர் நந்தன், முன்னாள்  மாவட்ட செயலாளர் ஜானகிராமன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பாரதிராஜா,  மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி, தொகுதி துணை செயலாளர்கள் கேசவன் கோவிந்தராஜ், ஒன்றிய துணை செயலாளர் தீரன் தீர்த்தகிரி, சோலைஆனந்தன், கலையரசன்,  சக்திவேல், சாந்தலிங்கம்,  ராஜசேகர், கோபி,  அரூர் பாஷா, காவேரி, மகளிரணி ஞானச்சுடர்,  சிந்தைமா, தமிழன், ராமலிங்கம், சிறுத்தை, வேலு, சக்திதாசன்  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி கல்லூரி மாணவ, மாணவிகள் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி..!

Image
கல்லூரி மாணவ, மாணவிகள் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி..! தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா, மாவட்ட போக்குவரத்து காவல் தருமபுரி, வட்டார போக்குவரத்து அலுவலகம் தருமபுரி மற்றும் தருமபுரி பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இருந்து நான்கு ரோடு வரை விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஷ்வரன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் நேரு யுவ கேந்திரா, தருமபுரி பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், நேரு யுவ கேந்திரா தேசிய இளைஞர் தொண்டர்கள் சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.  மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத...

மதத்தை இழிவுபடுத்தி பேசிய திமுக மத்திய ஒன்றிய செயலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

Image
 மதத்தை இழிவுபடுத்தி பேசிய திமுக மத்திய ஒன்றிய செயலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்..! தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மதத்தை இழிவுபடுத்தி பேசிய தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணனை கண்டித்து தலித் விடுதலை கட்சி மற்றும் இந்திய மூல நிவாசி காவல் படையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மூல நிவாசி காவல் படையின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழமுதன், தலித் விடுதலைக் கட்சி மாவட்ட செயலாளர் நாகேந்திரன் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில்  திமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், கட்சி விட்டு நீக்கு என கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுரேஷ், பிரசாந்த், சந்தோஷ், தீனா, நாகராஜ், தமிழ்ச்செல்வன், சரசுராம்ரவி, முனுசாமி, அம்பேத்கர், தலித் விடுதலை கட்சி மற்றும் இந்திய மூல நிவாசி காவல் படை பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டி கட்சி சார்பாக நடத்த தடை விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

Image
 ஜல்லிக்கட்டு போட்டி கட்சி சார்பாக நடத்த தடை விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியினை கட்சி சார்பாக நடத்தக் கூடாது எனவும் ஜல்லிக்கட்டு போட்டியினை அரசே நடத்த வேண்டும் என்று பொது மக்களின் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது;  தருமபுரி மாவட்டத்தில் வந்து பாத்தீங்கன்னாக்க தொடர்ந்து ஒரு நான்கு ஐந்து ஆண்டுகாலமாக வந்து ஜல்லிக்கட்டு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது, இது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசே வந்து ஜல்லிக்கட்டு சிறந்த முறையில் சிறப்பான முறையில் நடத்தியது. அதை தொடர்ந்து வந்து இரண்டு ஆண்டுகளுக்கு காலமாக அதை வந்து நடத்த முன்வரவில்லை அதை தொடர்ந்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவது ஒரு தனிப்பட்ட கட்சியை சார்பாக ஒரு தனிப்பட்ட அரசியல் நோக்கோடும் பணம் வசூலிக்கும் எண்ணத்தோடும் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு தனிப்பட்ட ஒரு கட்சியினுடைய பிரமுகர்கள் நடத்துவதை தடை செய்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய நே...

பாலக்கோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து போலீசார் ஹெல்மெட் பேரணி..!

Image
 பாலக்கோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து  போலீசார்  ஹெல்மெட் பேரணி..! தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த போலீசாரின்  ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை  டி.எஸ்.பி மனோகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கருதி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது. அதனையொட்டி பாலக்கோடு உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி ஆகிய  காவல் நிலையங்களுக்குப்பட்ட போலீசார் இருசக்கர வாகனங்களில் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தாசில்தார் அலுவலகம், கடைவீதி, பேருந்து நிலையம், ஸ்தூபி மைதானம், காவல் நிலையம், புறவழிச் சாலை வழியாக ஊர்வலமாக சென்று வாகன ஓட்டிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இந்த பேரணியின் போது தலைகவசம் உயிர்கவசம், தலைகவசம் அணியாமல் வாகனத்தை இயக்காதே, தலைகவசம் அணிவோம் உயிரை பாதுகாப்போம்...

தெத்துபள்ளம் கிராமத்தில் பழங்குடி இருளர் இன மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய தருமபுரி எம்.பி..!

Image
 தெத்துபள்ளம் கிராமத்தில் பழங்குடி  இருளர் இன மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய தருமபுரி எம்.பி..! தருமபுரிமாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், பிக்கனஅள்ளி ஊராட்சியில் உள்ள தெத்துப்பள்ளம் மலை கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மலைவாழ்  இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இருளர் இன மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடும் நிகழ்ச்சி மாநில விவசாய அணி துணைத் செயலாளர்  சூடப்பட்டி சுப்ரமணி தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு, பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கில் கோபால், ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட பழங்குடி இன பெண்கள் பாரம்பரிய முறைப்படி, கரும்பு, மஞ்சளுடன், வண்ண கோலமிட்டு  பொங்கல் வைத்து சூரியனக்கு படைத்து பொங்கலோ பொங்கல் என்று ஆராவாரம் செய்து   பொங்கல் விழா கொண்டாடினர். இதில்  தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்கள் கலந்து கொண்டு இருளர் இன மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடி,  அப்பெண்களுக்கு சேலைகளை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்ற...

பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!

Image
 பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாட்டில் 12,525 கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் பணி பதிவேடு உள்ள 40 ஆண்டுகாலம் பணிபுரிந்த டேங்க் ஆபரேட்டர்கள் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கிராம ஊராட்சியில் ரூபாய் 250 ஊதியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு பணி வரன் முறை வேண்டியும், பத்து ஆண்டு பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், மூன்று ஆண்டு பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வேண்டும், பத்து ஆண்டு பணி முடித்து கிராம ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு இதுவரை பொங்கல் போனஸ் கூட தமிழக அரசு வழங்கவில்லை ...