ஆவடி அருகே 6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான இரண்டாம் ஆண்டு கராத்தே போட்டி...!

 ஆவடி அருகே ,6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான இரண்டாம் ஆண்டு கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

 திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த ஜெயா கல்லூரி விளையாட்டு திடலில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ் வழங்கினார் இப்போட்டியில் 6 வயதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், செவ்வாபேட்டை, வெங்கம் பாக்கம் கசுவா மோரை, வேப்பம்பட்டு போன்ற பகுதிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தான் பயிற்சியாளர்கள் அளித்த பயிற்சியை வைத்து இப்போட்டியில் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.

 போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் ரமேஷ் மற்றும் ராஜா மாணவ, மாணவிகள் பெற்றோர்களும் பயிற்சி ஆசிரியர்களும் கல்லூரி தாளாளர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!