விபத்தில்லா தீபாவளி எப்படி கொண்டாடுவது என்று விழிப்புணர்வு பிரச்சாரம்..!

விருதுநகர் மாவட்டம்;

விருதுநகர் மாவட்ட அலுவலர் உத்தரவின்படி காரியாபட்டி தீ தடுப்பு குழு நிலைய அலுவலர் கு.குணசேகரன் தலைமையில் மூன்று சாலை சந்திப்பு, பாண்டியன் நகர், செவல்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த விபத்தில்லா தீபாவளி எப்படி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று தீயணைப்புத் மற்றும் மீட்பு பணி துறையினர் கு.குணசேகரன்  அவர்கள் தலைமையில் விழிப்புணர் பிரச்சாரம் செய்து துண்டு பிரசுரங்களை வழங்கி வந்தனர். 


தீபாவளி பண்டிகை சமயம் பட்டாசு வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்;


1. குடிசை பகுதிகள், மின்டிரான்ஸ்பார்மர்கள், பெட்ரோல் பங்குகள் வைக்கோல் போர்கள் அருகில் பட்டாசு வெடிப்பதை கட்டாயம் தவிர்க்க
வேண்டும்.

2. மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள்,
மார்க்கெட் பகுதிகள், அரசு அலுவலங்கள், பஸ்நிலையம், ஊர்திகள் நிறுத்தும் இடங்கள் ஊர்தி செல்லும் சாலைகள், பொதுமக்கள்
நடைபாதைகள், பொதுமக்கள் கூடுமிடங்களில் பட்டாசு வெடிப்பதை
கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

3.சிறுவர்கள் கையில் பட்டாசு வெடிகளை வழங்காமல் பெரியவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாப வெடிக்க செய்ய வேண்டும்.

4. ராக்கெட் போன்ற வெடிகளை குடிசை பகுதிகள் மற்றும் மரங்கள் நிறைந்த இடங்களில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும், திறந்தவெளி மைதானத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும்.

5. மத்தாப்புகளை பாதி எரிந்த நிலையில் தூர வீசி எரிய கூடாது, அவ்வாறு செய்தால் எரிந்த இடத்தில் தீ பிடிக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டு பெரும் சேதம் விளையகூடும்.

6. வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் கையில் எடுக்க கூடாது, தண்ணீர்
ஊற்றி அழிக்க வேண்டும்.

7. பட்டாசுகளை நீளமான பக்திகளை உபயோகித்து வெடிக்க வேண்டும். மிக அருகில் சென்று வெடிப்பதால் உடலில் தீகாயம் ஏற்படவாய்ப்பாக
அமைந்துவிடும்.

8. பட்டாசு வெடிக்கும் போது கட்டாயம் ஒரு வாளியில் தண்ணீர் வைக்க
வேண்டும்.

9. அதிக சத்தம் மற்றும் அதிக ஒளி ஏற்படுத்ம் பட்டாசுகளை
குடியிருப்புகளிலிருந்து தள்ளி திறந்த வெளிமைதானத்தின் வெடிக்க வேண்டும்.

10. பட்டாசு விற்பனை கடைகள் அருகில் பட்டாசு வெடிக்க கூடாது, அதனால் தீப்பொறி பட்டாசு கடையில் பிடித்து பெரும் விபத்தாக அமைய வாய்ப்பாகிவிடும்.

11. உடலில் தீ காயம் ஏற்பட்டால் உடனே குளிர்ந்த தண்ணீர் கொண்டு குளிக்க வேண்டும், இதனால் தீயின் வெப்பம் உடலில் மற்ற பாகங்களுக்கு பரவுவது தவிர்க்கப்படும் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

12 உடலில் தீ பற்றிகொண்டால் அங்கும் இங்கும் ஓடாமல் தரையில் படுத்து உறுலவும், 

13. ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் 101, 100, 108 என்ற எண்களுக்கு
தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும், 

14. தவறான தகவல்களை கண்டிப்பாக தெரிவிக்ககூடாது என்று  இந்த தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட விழிப்புணர் பிரச்சாரம் செய்து தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு பணிகள் துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!