பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!

 பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட நலத்திட்ட பிரிவு துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமை தாங்கினார். இதில் ஷோரூம் உரிமையாளர் ஜெகதீஷ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தொழிலதிபர்கள் கேசவராஜ், விமல்ராஜ், சக்திதரன், மங்களகணபதி முருகேசன், ராஜாமணிசரவணன், நகை கடைசங்க தலைவர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் சிறப்பு விருந்தினராக திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி புதிய மொபைல் ஷோரூமை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து வணிகர் சங்க தலைவர் முத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.





இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலசுந்தரம், அன்புமணி, தேமுதிக மாவட்ட செயலாளர் விஜய்சங்கர், பாஜக நகர் மண்டல் தலைவர் கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வேளாவள்ளி சேகர், கணபதி, சின்னவன், தேமுதிக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேசன்,  தொழிலதிபர்கள் தண்டாயுதபாணி, சிவாஜி, பேரூராட்சி கவுன்சிலர்கள் பி.எல்.ரவி, சரவணன், விமலன், குருமணி, பிரியாகுமார், இதயாத்துல்லா,  பத்தேகான் மற்றும் குமரன், தளபதி முருகன், சேகர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் தொழிலதிபர் விஜி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!