இலவசமாக 3.4 லட்சம் மதிப்புள்ள குடிநீர் இயந்திரங்கள் மற்றும் எல்இடி டிவிகள் வழங்கப்பட்டுள்ளது.

 தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பாளையம்புதூர் அருகில் இயங்கி வரும் பிரைவேட் நிறுவனத்தின் CSR Corporate Social Responsibilites மூலமாக கீழ்வரும் அரசு பள்ளிகளுக்கு பாளையம்புதூர் சுங்க சாவடியின் திட்டத் தலைவர் சிவகுமார் அவர்களின் தலைமையில் இலவசமாக 3.4 லட்சம் மதிப்புள்ள குடிநீர் இயந்திரங்கள் மற்றும் எல்இடி டிவிகள் வழங்கப்பட்டுள்ளது.


1. அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஏலகிரி 43 இன்ச் எல்இடி டிவி 3


2. அரசினர் மேல்நிலைப்பள்ளி மானியாதஹள்ளி, ஜருகு 43 இன்ச் எல்இடி டிவி 3

3. அரசு துவக்கப்பள்ளி வெள்ளக்கல் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று மற்றும் 43 இன்ச் எல்இடி டிவி 1.


4. அரசு துவக்கப்பள்ளி சமத்துவபுரம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று.


5. அரசு நடுநிலைப்பள்ளி தடங்கம் 43 இன்ச் எல்இடி டிவி ஒன்று குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று மற்றும் மரக்கன்றுகள் நட்டு பல்வேறு நன்கொடைகளை வழங்கினார்கள்.
இதில் நிர்வாகம் மற்றும் கணக்குத் துறை மேலாளர் ஜோஸ்லின் ஸ்மைல், சுங்க சாவடி இயக்க மேலாளர் அருண்குமார், சாலை பாதுகாப்பு QQஅலுவலர் ஞானசேகர், பொறியாளர் சதீஷ்குமார், சாலை மேற்பார்வையாளர் முருகன், கணக்கு அலுவலர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருட்கள் வழங்கப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கவேல், பரமசிவம், தலைமை ஆசிரியர் கலைமணி, நாகரத்தினம், மகருண்ணிஷா, ஆகியோர் பெற்றுக்கொண்டு மாணவர்களும், ஆசிரியர்களும் சுங்க சாவடி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!