தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து இல்லம் திரும்பும் வழியில், இந்திய விடுதலைப் போரில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட விடுதலைப் போரில் தமிழகம் என்ற மூன்று அலங்கார ஊர்திகளை
சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலை, விவேகானந்தர் இல்லம் அருகே, பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை, திருவல்லிக்கேணி - ரேக்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, இ.வி.இ. மெட்ரிகுலேஷன் பள்ளி,
என்.கே.டி. நேஷ்னல் ஆண்கள் பள்ளி, மயிலாப்பூர் - பி.எஸ். பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ, மாணவியர்கள் கண்டுகளித்து கொண்டிருந்ததை கண்டு,முதலமைச்சர் தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி அங்கிருந்த மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி மாணவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.
Comments
Post a Comment