மயான கொள்ளை திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது

 சென்னை திருமுல்லைவாயலில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சிவா விஷ்ணு ஆலயத்தில் மயான சூறை வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. 

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் இல் புகழ் பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் நடைபெறும் மயான கொள்ளை திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. 34ஆம் ஆண்டு முன்னிட்டு ஆலயத்தில் ஏராளமான பெண்கள் மாவிளக்கிட்டு வழிபாடு நடத்தினர். சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், நடைபெற்றது. பின்னர் அங்காளம்மன் சுவாமி  வீதி வீதியாக ஊர்வலமாக வந்து   மயானத்தை அடைந்தது.

மயான கொள்ளையில் பக்தர்கள் வேண்டுதலாக விரதம் இருந்து காணிக்கையாக வழங்கிய கிழங்கு வகைகள், நவதானிய வகைகள் வைக்கப்பட்டிருந்தன. சுவாமி தீபாரதனைக்கு பிறகு கொள்ளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கிழங்கை பக்தர்கள் உண்ணுவதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிடைக்கும் இதில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!