மாணவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்திய விடுதி வாடர்ன் கைது

 மாணவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்திய விடுதி வாடர்ன் கைது

திருவண்ணாமலை  மாவட்டம்ஆரணி அருகே அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு ஓரினச்சேர்க்கை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விடுதி துணை காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆரணி அருகே பத்தியாவரம் கிராமம் சூசை நகர் பகுதியில் புனித வளனார் ஆண்கள் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகாமையில் பள்ளிக்கான விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் வெளியூரிலிருந்து வந்த 113 மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்று விடுதியில் தங்கி பயின்று வரும் 9,10,11,12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் திருவண்ணாமலை சமூக நலத்துறைக்கு இணையதளம் மூலம் புகார் ஒன்று அளித்துள்ளனர். அதில், விடுதி துணை காப்பாளர் துரைப்பாண்டி(35) என்பவர் இங்கு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை ஓரின சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக குறிப்பிட்டிருந்தனர்.இந்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட 8 மாணவர்களை திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையின் முடிவில் துணை விடுதி காப்பாளர் துரைப்பாண்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது உண்மை என்பது தெரியவந்தது. இதனையடுத்து இதுகுறித்து.சமூகநலத்துறை அதிகாரிகள் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார் விடுதி துணை காப்பாளர் துறை பாண்டியை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!