வேப்பம்பட்டு அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு - 500 க்கும் மேற்பட்ட சுற்று வட்டார பக்தர்கள் பங்கேற்பு
வேப்பம்பட்டு அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு - 500 க்கும் மேற்பட்ட சுற்று வட்டார பக்தர்கள் பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு புளிய மரத்து பேரூந்து நிறுத்தம் அருகில் உள்ள குளக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் இக்கோயிலின் குடமுழுக்கு விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இவ்வூரைச் சுற்றியுள்ள வட்டாரப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து மனம் மகிழ்ந்தனர்.
இத்திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவிற்காக பல இலட்ச மதிப்பீட்டிலான புனரமைப்புத் திருப்பணிகள் நடைப்பெற்று, கடந்த சில நாட்களாக அதற்கான யாக குண்டசாலை அமைத்து சிவாச்சாரியார் மற்றும் வேத விற்பன்னர்கள் பங்கேற்று மந்திரம் முழுங்க யாக கால பூஜைகள் நடைபெற்று வந்தது .
அதன் தொடர்ச்சியாக நேற்று காலை விக்னேஸ்வர பூஜை புண்ணியாகவாசனம் நான்காம் கால பூஜை யாகசாலை பூஜை விசேஷ திரவிய பூஜை செய்யப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட புண்ணிய தீர்த்தங்களை சிவாச்சாரியார்கள்
ஆலயத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்களுக்கு மந்திரம் முழுங்க புனித நீர் ஊற்றி தீபாதாரனை காட்டப்பட்டு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
பின்னர் கருவறையில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னி அம்மனுக்கு பாலபிஷேகம், நெய்யபிஷேகம், தீபாரதனை பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட பொதுமக்கள் அனைவரும் கோபுர மற்றும் சாமி தரிசனம் செய்து வழிப்பட்டு மனம் மகிழ்ந்தனர்.


Comments
Post a Comment