ஆவடி ரயில் நிலையத்தில் ரயில் பாதுகாப்பு குறித்த மைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
ஆவடி ரயில் நிலையத்தில் ரயில் பாதுகாப்பு குறித்த மைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
செல்போன் பேசிக்கொண்டே இருப்பு பாதையை கடந்து சென்றவர்களை ரயில்வே போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ரயில்வே இருப்பு பாதைகளை கவனக்குறைவாக கடப்பதால் ரயில் மோதி அதிக அளவிலான விபத்துக்கள் நடைபெறுகின்றன.இதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆவடி ரயில்வே போலீசார் சார்பில் தனியார் கல்லூரி மாணவர்கள் மூலமாக மைம் வாயிலாக செல்போன் பேசிக்கொண்டு இருப்பு பாதையை கடக்க கூடாது,இருப்பு பாதைகளில் செல்பி எடுப்பது,வீடியோ தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்பனவற்றை விளக்கும் விதமாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதனை அவ்வழியே பயணித்த பொதுமக்கள் நின்று கவனித்து சென்றனர்.
இதனை தொடர்ந்து இருப்பு பாதையில் செல்போன் பேசிக்கொண்டும்,வாகனங்களை ஒட்டிக்கொண்டு வந்த சிலரை ரயில்வே காவலர்கள் பிடித்து அவர்களை இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.



Comments
Post a Comment