ஆவடி அருகே டாக்டர் அம்பேத்கர் ,அவர்களின் திருஉருவ சிலை திறப்பு விழா ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி திறந்து வைத்தனர்.
ஆவடி அருகே டாக்டர் அம்பேத்கர் ,அவர்களின் திருஉருவ சிலை திறப்பு விழா ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி திறந்து வைத்தனர்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பட்டாபிராம் நிமிலிச்சேரி பகுதியில் டாக்டர் பாபா சகோ அம்பேத்கர் அவர்களின் 131 பிறந்தநாள் விழா முன்னிட்டு டாக்டர் அம்பேத்கார் சங்கத்தின் சார்பாக ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி புதிதாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவச் சிலை அமைத்து மணிமண்டபம் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி டாக்டர் அம்பேத்கார் அவர்களின் புதிதாக நிறுவப்பட்ட திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி கேக் வெட்டி கொண்டாடினார் இந்நிகழ்ச்சியில் நிமிலிச்சேரி கிராம மக்கள் ஒன்றிணைந்து சிறப்பான முறையில் கொண்டாடினர்.



Comments
Post a Comment