ஆவடி அடுத்த திருநின்றவூரில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக குருத்தோலை பவனி நடைபெற்றது
ஆவடி அடுத்த திருநின்றவூரில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக குருத்தோலை பவனி நடைபெற்றது
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ஆவடியை அடுத்த திருநின்றவூரில் திருவள்ளூர் மாவட்டம் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக தந்தை மைக்கேல் பிரான்சிஸ், தந்தை ஷோஸ், தந்தை டேவிட் குருதாஸ் ஆகியோர் தலைமையில் குருத்தோலை ஞாயிறு யொட்டி பலட்சுமிபுரம் சீயோன் ஆலயத்திலிருந்து குருத்தோலை பவனி புறப்பட்டு சிஎஸ்ஐ ஆலயம் வழியாக பெரியபாளையம் சாலையில் உள்ள ஆர் சி சர்ச் வந்தடைந்தது.
ஆலயத்தில் பின்னர் பாதிரியார்கள் சிறப்பு ஜெபம் செய்து இயேசுவின் பாடல்கள் பாடினார் இந்தக் குருத்தோலை பவனிவிழாவில் திருநின்றவூரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment