அரூர் அடுத்த மேல் செங்கப்பாடியில் மர்மமான முறையில் மாடுகள் இறந்து வருகிறது

அரூர் அடுத்த மேல் செங்கப்பாடியில் மர்மமான முறையில் மாடுகள் இறந்து வருகிறது

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மேல் செங்கப்பாடியில் தொடர்ந்து மர்மமான முறையில் சில நாட்களாக மாடுகள் இறந்து வருகிறது. இதுவரைக்கும் 10 -க்கும் மேற்ப்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதை தொடர்ந்து இன்று அரூர் மேல் செங்கப்பாடியே சேர்ந்த முருகன் என்பவரது பசுமாடு ஒன்று  இறந்துள்ளது. இதனால் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க கால்நடை மருத்துவர்கள்  உடனடியாக வந்து மாடு இறப்பதற்கு காரணத்தை பரிசோதனை செய்து நோய் தாக்கப்பட்டுள்ளதா இல்ல வேற ஏதேனும் காரணமா என்று எங்களுக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர். தொடர்ந்து மாடுகள் இறப்பதால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் சோகத்துடனும், அச்சத்துடனும் இருக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!