சாலை விபத்தில் மரணமடைந்த ஊர்க்காவல் படை நபர் குடும்பத்தினருக்கு விபத்து காப்பீடு..!

 தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் கடந்த 2019 -ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் த/பெ. நடராஜன் (ஊர்க் காவல் படை எண் 203) என்பவர் 26.01.2024 அன்று நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து 

தருமபுரியிலுள்ள ஏ.ஜெட்டிஹள்ளி கனரா வங்கிக் கிளையில் இவரது ஊதிய வங்கிக் கணக்கு இருந்தமையால் அவ்வங்கியின் "payroll" விதிகளின்படி ஒருங்கிணைந்த விபத்துக் காப்பீட்டு நிதியாக ரூ.17,00,000/-ற்கான வங்கி வைப்புத் தொகைக்கான பத்திரங்களை கனரா வங்கியின் கோட்ட மேலாளர் வினிஷ்பாபு வழங்க, அவரிடமிருந்து பெற்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் 12.07.2024 அன்று மரணமடைந்த ஊர்க்காவல் படை வீரர் சுரேஷ் அவர்களின் மனைவி அஷ்வினி, மகள் அர்னித்தா, மகன் தர்ஷன் ஆகியோர் பெயரில் நேரில் வரவழைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  தருமபுரி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் ஊர்க்காவல் படை வட்டார தளபதி தண்டபாணி ஆகியோர் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!